உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இளங்குமரனார் தமிழ்வளம்

4

இசை நிறை அளபெடை :

செய்யுளில் தளை சிதையுமிடத்தில் உயிர் நெட்டெழுத்து தனக்குரிய அளவினின்றும் மிகுந்து ஒலிப்பது சை நிறை அளபெடையாகும்.

(எ.டு) “ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்.”

இடைச் சொற்களின் முன் வல்லினம் புணர்தல் :

திருக். 14

உயிரீற்று இடைச் சொற்களின் முன் வரும் வல்லினம் இயல்பாயும் மிக்கும் முடியும்.

(எ.டு) அம்ம

அம்மா

அம்ம கொற்றா!

அம்மா சாத்தா!

மியா

கேண்மியா பூதா!

மதி

சென்மதி பெரும!

என

புள்ளெனப் புறம் வேரார்

இனி

இனிச் செய்வேன்

அவனே கண்டான்?

இடைநிலை மயக்கம் :

அவனோ போனான்?

பதினெட்டு மெய்களிற் கசதப என்னும் நான்கையும் நீக்கி மற்றைய பதினான்கு மெய்களும் பிற மெய்களோடு கூடும் கூட்டம் வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகும். ரழ என்னும் இரண்டையும் நீக்கி மற்றைப் பதினாறு மெய்களும் தம்மோடு கூடுங்கூட்டம் உடனிலை மெய்ம்மயக்கமாகும். இவ்விரண்டு வகை மயக்கமும் ஒரு மொழிக்கு நடுவிலும் தொடர் மொழிக்கு நடுவிலும் வரும். உயிருடன் மெய்யும் மெய்யுடன் உயிரும் மயங்கும் மயக்கத்திற்கு அளவின்று.

இடையெழுத்து :

மெய்யெழுத்துகளில் யரலவழள என்ற ஆறு எழுத்து களும் வல்லினம் மெல்லினங்கட்கு இடைத்தரமாக ஒலிக்கின்றன வாதலால் இடையெழுத்துகளாகும். மேலும் வல்லினம் பிறக்கும்