உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

15

இடமாகிய மார்பிற்கும் மெல்லினம் பிறக்கும் இடமாகிய மூக்கிற்கும் இடையிடமாகிய கழுத்தினின்று பிறத்தலால் இடையெழுத்தெனப்பெயர் வந்ததென்பதும் தகும்.

இயல்பு புணர்ச்சி :

நிலைமொழியும் வருமொழியும் வேறுபாடு இன்றிப் புணர்வது இயல்பு புணர்ச்சியாகும்.

+

(எ.டு) மண் + பெரிது =

மண்பெரிது.

இயற்பெயர் முன்னர் தந்தை என்னும் முறைப் பெயர் புணர்தல் : னகரவீற்று இயற்பெயர் முன்னர் தந்தை என்னும் முறைப் பெயர் வருமொழியாய் வரின் முதற்கண் மெய்கெட அதன் மேல் ஏறிநின்ற அகரம் கெடாது நிலைபெறும் நிலைமொழியாகிய இயற்பெயர் அல் அன் என்னும் சொல்லில் அகரம் ஏறிநின்ற மெய்யை நீக்கி அல் அன் கெட்டு முடியும்.

(எ.டு) சாத்தன் + தந்தை

+

=

சாத்தந்தை

கொற்றன் + தந்தை = கொற்றந்தை

‘இலம்' என்னும் சொல்முன் ‘படு’ என்னுஞ்சொல் புணர்தல் :

இலம் என்னும் சொல்லிற்குப் படு என்னும் சொல் ருமொழியாய் வருங்காலத்து செய்யுளிடத்து மகரவிறுதி கெடாது இயல்பாய் முடியும்.

(எ.டு) "இலம் படு புலவ ரேற்றகை நிறைய'

‘இல்’என்பதற்குச் சிறப்பு விதி :

இல் என்னும் இன்மைப்

பண்பை உணர்த்துகின்ற

சொல்லுக்கு ஐகாரச் சாரியை பொருந்த அவ்விடத்து வருகிற வல்லினம் விகற்பித்தலும் ஆகாரச் சாரியை பொருந்த வல்லினம் மிகுதலும் இவ்விரு விதியும் பெறாமல் இயல்பாதலும் ஆகும்.

(எ.டு) இல்லைப் பொருள்

இல்லை பொருள்

இல்லாப் பொருள்

இல் பொருள்