உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ்வளம்

4

இன் சாரியையின் திரிபு :

இன் சாரியையின் இகரம் ஆ என்னும் சொல்லீற்று முன்னர்த்திரியும். அளவுப் பெயராகும் மொழி முதற்கண் உயிர்க்கு மேலாய் நின்ற இன் சாரியையது னகரம் றகரமாகத் திரியும்.

(எ-டு) ஆனை, பதிற்றகல், பதிற்றுழக்கு-

இனமென்றதற்குக் காரணம் :

பிறப்பிடமும், முயற்சியும் மாத்திரையும், பொருளும், வடிவமுமாகிய இவற்றுள் ஒன்று முதலாக ஒருபுடை ஒத்திருத்தல் னமாதற்குக் காரணமாகும்.

இன்னிசையளபெடை :

செய்யுளில் ஓசை குறையாவிடினும்

உண்டாகும் பொருட்டு

பெடையாகும்.

அளபெடுப்பது

னிய

ஓசை ன்னிசையள

(எ.டு) கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉ மெல்லா மழை.

இறந்தகால இடைநிலை :

திருக். 15

தகர டகர றகர மெய்களும் (த்,ட்,ற்) இன் என்பதும், ஆண்பால் முதலிய ஐந்து பால்களிலும், தன்மை முதலிய மூன்று இடங்களிலும் இறந்த காலத்தைத் தரும். வினைப் பகுபதங்களின் டைநிலைகளாம்.

(எ.டு)

நடந்தான், உண்டான், சென்றான், உறங்கினான் என்பவை போல.

ஈ காரம் பிறக்குமிடம் :

ஈ என்னும் எழுத்து வாய்திறத்தலுடனே மேல்வாய்ப் பல்லை நாக்கின் அடிப்பாகம் பொருந்தப் பிறக்கும்.

உதடுகுவிதலால் பிறக்கும் எழுத்துகள் :

உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஐந்து எழுத்துகளும் உதடு குவிதலால் பிறக்கும் எழுத்துகளாகும்.

(எ.டு)

66

ஊ ஒ ஓ ஔ இதழ் குவிவே”

1560T. 78