உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடம்படு மெய் :

எழுத்து

17

நிலைமொழியீற்றினும் வருமொழி முதலினும் நின்ற உயிர்களை உடம்படுத்தும் மெய் உடம்படும் மெய்யாம்.

(எ.டு) ய், வ் என்பவை உடம்படுமெய்கள்.

மணி அடித்தான் –

மண அழகு

உடனிலை மெய்ம் மயக்கம் :

மணியடித்தான்

மணவழகு

பதினெட்டு மெய்களில் ர, ழ என்னும் இரண்டையும் நீக்கி மற்றைப் பதினாறு மெய்களும் தம்மோடு கூடுங்கூட்டம் உடனிலை மெய்ம் மயக்கம்.

(எ.டு) பக்கம், பட்டம்.

உயிரளபெடை :

மொழிக்கு முதலிலும், இடையிலும் கடையிலும் நின்ற நெட்டுயிர்கள் ஏழும் செய்யுளில் ஓசை குறையும் பொழுது அவ்வோசையை நிறைக்கத் தம் அளவில் மிகுந்து ஒலிக்கும். அவ்வாறு மிகுந்து ஒலிப்பதைக்குறிக்க அந்தந்த நெட்டுயிர்களின் இனமாகிய குற்றெழுத்துகள் வரிவடிவில் எழுதப்படும். இவ்வாறு உயிர் நெட்டெழுத்துகள் தம்மளவில் மிகுந்து ஒலிப்பது உயிரள பெடை எனப்படும். நெட்டெழுத்துகள் ஏழனுள் ஒளகாரம் மொழிக்கு முதலில் மட்டும் அளபெடுக்கும். இடையிலும் ஈற்றிலும் அளபெடுக்காது. ஏனைய நெட்டெழுத்துகள் ஆறும் மூன்றிடத்தும் அளபெடுக்கும். எனவே உயிரள பத்தொன்பதாம். அப்பத்தொன்பதோடு இன்னிசையளபெடை, சொல்லிசை அளபெடை இரண்டையும் கூட்டி உயிரளபெடை ருபத்தொன்று என்பர்.

(எ.டு) ஓ ஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்

படை

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்

வாரி வளங்குன்றிக் கால்

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு

நல்ல படாஅ பறை.

திருக்.653

திருக். 14

திருக். 1115