உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

உயிரெழுத்துகள் :

இளங்குமரனார் தமிழ்வளம்

4

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள ஆகிய பன்னிரண்டும் உயிரெழுத்துகளாகும். இவை உயிர் போலத் தனித்தியங்கும் ஆற்றலும், மெய்யை இயக்கும் தன்மையும் உடையனவாதலால் உயிர் எழுத்துகள் என்று பெயர் பெற்றன.

உயிர் முன் வல்லினம் புணர்தல் :

இயல்பினாலாவது விதியினாலாவது மொழிக்கு ஈறாக நின்ற உயிர்களின் முன், வருமொழி முதலில் வருகின்ற கசதபக்கள் பெரும்பாலும் மிகும்.

(எ.டு) ஆடச் சென்றான், நேற்றைப் பொழுது,

வாழைப்பழம், மரக்கிளை.

உயிர்மெய்யெழுத்துத் தோன்றும் விதம் :

மெய் அகர உயிரோடு கூடிய பொழுது புள்ளியை நீக்கி, அவ்விட்டவடிவாகியும், 'ஆ' முதலிய மற்றைய உயிர்களோடு கூடும் பொழுது புள்ளியை விடுதல் மாத்திரமே யன்றி வடிவு வேறுபட்டும், உயிர் எழுத்திற்குரிய அளவையே பெற்று, வரி வடிவில் உயிர் உயிர் வடிவை வடிவை ஒழித்து, உயிரும் மெய்யுமாகிய இரண்டிடத்தும் பிறந்த உயிர்மெய் என்னும் பெயருடன் மெய்யொலி முன்னும் உயிரினொலி பின்னுமாகி உயிர்மெய் எழுத்து வரும். பன்னிரண்டு உயிர் எழுத்துகளுடன் பதினெட்டு மெய்யெழுத்துகள் தனித்தனியேசேர்வதால் உயிர்மெய்

யெழுத்து இருநூற்றுப் பதினாறாகும்.

உயிர்முன் உயிர் புணர்தல் :

வருமொழி முதலில் உயிர்வந்தால், இகர ஈகார ஐகாரங் களின் பின்னே யகர மெய்யும், அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் இவ்வேழு உயிர்களின் பின்னே வகரமெய்யும், ஏகாரத்தின் பின்னே யகரமெய்யும், வகரமெய்யும் உடம்படுமெய்யாக வரும்.

(எ-டு)

கிளி + அழகு = கிளியழகு

+

தீ + எரிந்தது

=

யகர்

தீயெரிந்தது

உடம்படு

மலை + அழகிது

=

மலையழகிது மெய்

பல + அணி

=

பலவணி

பலா + இலை

=

பலாவிலை