உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

இளங்குமரனார் தமிழ்வளம்

4

பூசல் மயக்கு: (ஆ)

வேந்தன் இறந்தமைக்கு உலகோர் இரங்குதலும் பூசல் மயக்கு என்னும் துறையாம்.

(எ.டு)

எண்ணின் இகல்புரிந்தோர் எய்தாத தில்போலும் கண்ணினொளிர் வேலான் கரந்தபின்-அண்ணல் புகழொடு பூசல் மயங்கிற்றாற் பொங்கும்

அகழ்கடல் வேலி அகத்து.

பூசல் மயக்கம் (இ

பெரிய புகழினை நிலை நிறுத்தி இறந்துபட்டவனைச் சுற்றிக் கூடிய உறவினர்கள், அவன் இறந்து பட்டமைக்கு அழுவது பூசன் மயக்கமாம்.

(எ.டு)

66

இரவலர் வம்மி னெனவிசைத்த லின்றிப்

புரவலன் மாய்ந்துழியும் பொங்கு- முரை மயங்க வேற்கண் ணியரழுத வெம்பூசல் கேட்டடங்கா தோற்கண்ணே போலுந் தொடி”

பூவைநிலை: (அ)

(தகடூர் யாத்திரை-இரங்கல்-2)

திருமாலுடைய காத்தற் புகழையும், ஏனோர்க்கு உரிய வாய்ப் பொருந்திய பெரிய தலைமையிற் குறையாத படைத்தல், அழித்தல் என்னும் புகழையும், அரசர் தொழிலுக்கு உவமை யாகக் கூறப்படுவது பூவைநிலையாகும்.

(எ.டு)

"குருந்த மொசித்தஞான் றுண்டா லதனைக்

கரந்த படியெமக்குக் காட்டாய்- மரம் பெறாப் போரிற் குருகுறங்கும் பூம்புன னீர்நாட

மார்பிற் கிடந்த மறு"

இது சோழனை மாயோனாகக் கூறிற்று. (காத்தல்)