உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

“ஏற்றூர்தி யானு மிகல்வெம்போர் வானவனு மாற்றலு மாள்வினையு மொத்தொன்றி னொவ்வாரே கூற்றக் கணிச்சியோன் கண்மூன் றிரண்டேயா மாற்றல்சால் வானவன் கண்

து சேரனை அரனாகக் கூறிற்று. (அழித்தல்)

பூவைநிலை: (ஆ)

309

காட்டிடத்தே மலர்கின்ற காயாம் பூவை, ஆனிரை காத்த திருமாலின் திருவுருவோடு உவமித்துப் புகழ்ந்தது பூவைநிலை என்னும் துறையாம்.

(எ.டு)

66

'பூவை விரியும் புதுமலரிற் பூங்கழலோய் யாவை விழுமிய யாமுணரேம்-மேவார் மறத்தொடு மல்லர் மறங்கடந்த காளை நிறத்தொடு நேர்தருத லான்.'

பெண்பாற் கிளவி:

என்னை அலர் தூற்றும் இவ்வூரினர். எம்மை நினையாத எனது நலத்தைக் கொள்ளை கொண்ட தலைவனை அறிந்திலர் என்று தலைவி கூறியது பெண்பாற்கிளவி என்னும் துறையாம். (எ.டு)

“வானத் தியலும் மதியகத்து வைகலும்

கானத் தியலும் முயல்காணும் - தானத்தின்

ஒள்வளை ஓடவும் உள்ளான் மறைந்துறையும் கள்வனைக் காணாதிவ் வூர்.”

பெருங்காஞ்சி: (அ)

எவராலும் தடுக்க முடியாத கூற்றுவன் வருவான் என்று சொல்லப் படுவது பெருங்காஞ்சியாம்.

(எ.டு)

“பல்சான்றீரே பல்சான்றீரே

கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்

பயனின் மூப்பிற் பல்சான்றீரே

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்