உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

இளங்குமரனார் தமிழ்வளம்

4

பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ

நல்லது செய்த லாற்றீ ராயினு மல்லது செய்த லோம்புமி னதுதா

னெல்லாரு முவப்ப தன்றியு

நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே”

பெருங்காஞ்சி: ஆ.

மலைகள் உயர்ந்து நிற்றற்கிடமான பெரிய உலகத்தின்கண் தோற்றமுடையன யாவும் நிலையுதலிலவாம் நெறியினைச் சொல்லியது பெருங்காஞ்சி என்னும் துறையாம்.

(எ.டு)

66

ஆயா தறிவயர்ந் தல்லாந் தகலிடத்து மாயா நிதியம் மனைச்செறீஇ- ஈயாது து

இறுகப் பொதியன்மின் இன்றோடு நாளைக் குறுக வருமரோ கூற்று.'

பெருங்காஞ்சி: (இ)

பகைவர் படையைத் தடுக்கும் ஆற்றலினையுடைய காஞ்சி மறவர்கள் தங்கள் தங்களது பேராற்றலை மிகப் பெரிய வஞ்சியார் படையினை எதிர்ந்து போர் செய்யும் முகத்தானே வெளிப் படுத்தியது பெருங்காஞ்சி என்னும் துறையாம்.

(எ.டு)

“வில்லார் குறும்பிடை வேறுவே றார்த்தெழுந்த

கல்லா மறவர் கணைமாரி-ஒல்லா

வெருவி மறவேந்தர் வெல்களி றெல்லாம் இருவி வரைபோன்ற இன்று.”

பெருஞ்சோற்று நிலை:

வேந்தர் போர்தலைக் கொண்ட பிற்றை ஞான்று போர் குறித்த படையாளருந் தானும் உடனுண்பான் போல்வதோர் முகமன் செய்தல் பெருஞ்சோற்று நிலையாகும்.

பெருந்திணை;

தன்னை விரும்பாத தலைவன் ஒருவனைத் தான் தழுவ விரும்பி இருளிலே அவனிருக்கைக்குச் செல்வாள் ஒருத்தியின் தன்மையைச் சொல்லியது பெருந்திணை என்னும் துறையாம். (பெருந்திணை- பொருந்தாக்காமம்.)