உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

இளங்குமரனார் தமிழ்வளம் 4

பின்னும் பிறங்கழல் வேய்ந்தன பெய்கழற்கால் மன்னன் கனல மறம்."

பேய்க் காஞ்சி (அ)

போர்க்களத்தில் விழுப்புண்பட்டு விழுந்த மறவரைப் பேய் மிகவும் அச்சமுறுத்தியது பேய்க்காஞ்சி என்னுந்துறையாம்.

(எ.டு)

"கொட்கு நிமிருங் குறுகுங் குடர்சூடிப்

பெட்ப நகும் பெயரும் பேய்மகள்- உட்கப் புனலங் குருதிப் புலால்வாய்க் கிடந்து கனல விழிப்பவர்க் கண்டு'

பேய்க் காஞ்சி (ஆ)

போர்க்களத்துப்

பாதுகாக்குஞ்

சுற்றம் இல்லாத

புண்பட்ட மறவனைப் பேய்கள் காக்கும் நிலையைக் கூறுவது பேய்க்காஞ்சி என்னுந்துறையாம்.

(எ.டு)

"புண்ணனந்த ருற்றானைப் போற்றுந ரின்மையிற் கண்ணனந்த ரில்லாப்பேய் காத்தனவே - யுண்ணு

முளையோரி யுட்க வுணர்வொடு சாயாத

விளையோன் கிடந்த விடத்து”

பேய்க்குரவை:

தும்பை வேந்தனது தேரின் முன்னும் பின்னும் பேய்கள் கூத்தாடியது பேய்க்குரவை என்னும் துறையாம்.

(எ.டு)

"முன்னரும் பின்னரும் மூரிக் கடற்றானை மன்னன் நெடுந்தேர் மறனேத்தி- ஒன்னார் நிணங்கொள்பேழ் வாய நிழல்போல் நுடங்கிக் கணங்கொள்பேய் ஆடுங் களித்து.”

பேய் நிலை:

போர்க்களத்தே விழுப்புண் பட்டு விழுந்த மறவனைப் பேய் காவல் செய்தது பேய்நிலை என்னும் துறையாம்.