உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

329

செல்கணை மாற்றிக் குரிசில் சிறைநின்றான் கொல்கணைவாய் வீழ்தல் கொடிது.”

மூதில் முல்லை:

மறக்குடிப் பிறந்த மறவர்க்கேயன்றி அம்மறக்குடியிற் பிறந்த மடப்பத்தையுடைய பெண்டிர்க்கும் மறப் பண்பினைச் சிறப்பித்தது மூதில் முல்லை என்னும் துறையாம்.

(எ.டு)

66

“வந்த படைநோனாள் வாயின் முலைபறித்து வெந்திறல் எஃகம் இறைக்கொளீஇ-முந்தை முதல்வர்கல் தான்காட்டி மூதில் மடவாள் புதல்வனைச் செல்கென்றாள் போர்க்கு.”

மூவகை நிலை:

பகைவர்கள் அஞ்சும் படியான காலாட்படை, யானைப் படை, குதிரைப் படை என்னும் முப்படைகளின் நிலையைக் கூறுவது மூவகை நிலையாகும்.

மெலிதல்:

தலைவி ஊரார் தூற்றுகின்ற பழிச் சொல்லுக்கு நாணி வருந்தி வாட்டத்துடன் இருப்பது மெலிதல் என்னும் துறையாம். (61.6)

66

'குரும்பை வரிமுலைமேற் கோல நெடுங்கண்

அரும்பிய வெண்முத் துகுப்பக்- கரும்புடைத்தோட்

காதல்செய் காமம் கனற்ற

ஏதி லாளற் கிழிந்தனென் எழிலே.'

மெலிவொடு வைகல்:

அலர்நாணி வருந்திய தலைவி மேலும் காமம் வருத்து வதால் வளையல்கள் கழலவும், அழகு கெடவும் வருந்திய தலைவியின் தளர்ச்சியின் மிகுதியைச் சொல்லியது மெலிவொடு வைகல் என்னும் துறையாம்.

(எ.டு)

“பிறைபுரை வாணுதல் பீரரும்ப மென்தோள்

இறைபுனை எல்வளை யேக- நிறைபுணையா