உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

இளங்குமரனார் தமிழ்வளம்

4

யாம நெடுங்கடல் நீந்துவேன்

காம ஒள்ளெரி கனன்றகஞ் சுடுமே."

னை கைக்கோள்:

யானை

உழிஞை மறவர் தம்மோடு பகை கொண்ட நொச்சியாரை வென்று அவர்தம் யானையையும், காவற்படையையும் கைப் பற்றியது யானை கைக்கோள் என்னும் துறையாம்.

(எ.டு)

“ஏவல் இகழ்மறவர் வீய இகல்கடந்து

காவலும் யானையும் கைக்கொண்டான் - மாவலான்

வம்புடை ஒள்வாள் மறவர் தொழுதேத்த

அம்புடை ஞாயில் அரண்."

யானைமறம்:

தும்பை மன்னனுடைய இளங்களிற்றினது தறுகண்மையைச் சொல்லியது யானைமறம் என்னும் துறையாம்.

(எ.டு)

66

அடக்கருந் தானை அலங்குதார் மன்னர் விடக்கும் உயிரும் மிசையக்- கடற்படையுள் பேயும் எருவையும் கூற்றுந்தன் பின்படரக் காயுங் கழலான் களிறு.

வஞ்சிக் காஞ்சி:

தன் கணவன் உயிரைப் போக்கிய அந்த வேலினாலேயே தன் உயிரை (இறந்தவன் மனைவி) நீப்பது வஞ்சிக் காஞ்சியாகும். (எ.டு)

இன்ப முடம்புகொண் டெய்துவிர் காண்மினோ வன்பி னுயிர்புரக்கு மாரணங்கு - தன்கணவ னல்லாமை யுட்கொள்ளு மச்சம் பயந்ததே

புல்லார்வேன் மெய்சிதைத்த புண்"

(தகடூர் யாத்திரை- புறத்திரட்டு-மூதின் மறம்-8)