உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சித் திணை: (அ)

புறப்பொருள்

331

வஞ்சிப்பூ மாலையைத் தலையிலே சூடி ஓர் அரசன் தன் பகைவன் மண்ணைக் கைப் பற்றுதலைக் கருதியது வஞ்சித் திணையாகும்.

(எ.டு)

“செங்கண் மழவிடையின் தண்டிச் சிலைமறவர் வெங்கள் மகிழ்ந்து விழவமர- அங்குழைய வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டார்ப்பக் குஞ்சி மலைந்தானெங் கோ'

வஞ்சித் திணை: (ஆ)

வஞ்சி என்னும் புறத்திணை முல்லை என்னும் அகத் திணைக்குப் புறனாகும். மண்ணாசையினாலே மிக்கு விளங்கும் அரசனுடன் மற்றோர் அரசன் சென்று அஞ்சும்படியான போர் செய்தலைக் கருதியது.

வஞ்சியரவம்:

வஞ்சி வேந்தனுடைய மறவர்குழாம் வாள் முதலிய படை களுடன் போர் கருதி வெகுண்டு எழுந்தது வஞ்சியரவம் என்னுந் துறையாம்.

(எ.டு)

“பௌவம் பணைமுழங்கப் பற்றார்மண் பாழாக வௌவிய வஞ்சி வலம்புனையச் - செவ்வேல்

ஒளிறும் படைநடுவண் ஊழித்தீ யன்ன

களிறும் களித்டுததிருங் கார்’

வஞ்சினக் காஞ்சி:

காஞ்சி மன்னன் தன் பகைவரை வெல்லுதற் பொருட்டுச் சூள் மொழிந்தது வஞ்சினக் காஞ்சி என்னுந் துறையாம்.

(எ.டு)

'இன்று பகலோன் இறவாமுன் ஒன்னாரை வென்று களங்கொள்ளா வேலுயர்ப்பின்-என்றும் அரணவியப் பாயும் அடையார்மு னிற்பேன்

முரண்அவிய முன்முன் மொழிந்து'