உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

இளங்குமரனார் தமிழ்வளம்

4

வஞ்சினம்;

ச்செயலைச் செய்யாது ஒழிவே னாயின் யான் இன்ன கேட்டினை அடையக் கடவேன் என்று கூறுவது வஞ்சினம். (வஞ்சினக் காஞ்சியாம்.)

(எ.டு)

“மெல்ல வந்தெ னல்லடி பொருந்தி யீயென விரக்குவ ராயிற் சீருடை

முரசுகெழு தாயத் தரசோ தஞ்ச

மின்னுயி ரானுங் கொடுக்குவெ னிந் நிலத்

தாற்ற லுடையோ ராற்றல் போற்றாதென் னுள்ள மெள்ளிய மடவோன் றெள்ளிதிற் றுஞ்சுபுலி இடறிய சிதடன் போல

வுய்ந்தனன் பெயர்தலோ வரிதே மைந்துடைக் கழைதின் யானைக் காலகப் பட்ட

வன்றிணி நீண்முளை போலச் சென்றவண்.

வருந்திப் பொரேஎ னாயிற் பொருந்திய

தீதி னெஞ்சத்துக் காதல் கொள்ளாப்

பல்லிருங் கூந்தன் மகளி

ரொல்லா முயக்கிடைக் குழைகவென் தாரே”

வணிகர்க்கு உரியவை:

கற்றல், வேள்வி செய்தல், கொடுத்தல், உழவுத் தொழில் புரிதல், வாணிகஞ் செய்தல், பசுக்களை வளர்த்துக் காத்தல் ஆகிய ஆறும் வணிகர்க்கு உரியனவாம்.

(எ.டு)

“ஈட்டிய தெல்லா மிதன்பொருட் டென்பதே

காட்டிய கைவண்ணங் காட்டினார்- வேட்டொறுங்

காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகர்

தாமரையுஞ் சங்கும்போற் றந்து

இது ஈகையைக் குறிப்பது.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் தொழுதுண்டு பின்செல் பவர்”

இது உழவுத் தொழிலின் சிறப்புக் கூறியது.