உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

“வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவுந் தமபோற் செயின்”

து வாணிகச் சிறப்புக் கூறியது.

ஏனையவை வந்துழிக் காண்க.

வரவெதிர்ந்திருத்தல்:

333

கூர்மையான பல்லையுடைய தலைவி பலவகையாக அணி செய்யப்பட்ட தனது செல்வம் மிக்க மலையிடத்தே தலைவனது வருகையை ஏற்றது வரவெதிர்ந்திருத்தல் என்னும் துறையாம். (எ.டு)

66

'காம நெடுங்கடல் நீந்துங்காற் கைபுனைந்த பூமலி சேக்கை புணைவேண்டி- நீமலிந்து செல்லாய் சிலம்பன் வருதற்குச் சிந்தியாய் எல்லாக நெஞ்சம் எதிர்.”

வல்லாண் முல்லை:

ஒரு மறவனது குடி நன்மையையும் ஊர் நன்மையையும் அவனது இயல்பு மிகுதியையும் பாராட்டி அவனது ஆண்மைத் தன்மையினது நன்மையை விதந்து கூறியது வல்லாண்முல்லை என்னும் துறையாம்.

(எ.டு)

66

‘வின்முன் கணைதெரியும் வேட்டைச் சிறுசிறார் முன்முன் முயலுகளு முன்றிற்றே- மன்முன் வரைமார்பின் வேல்மூழ்க வாளழுவந் தாங்கி உரைமாலை சூடினான் ஊர்.”

வள்ளி :

அணிகலன்களைத் தாங்கிய மகளிர் தங்கள் மனம் மகிழுமாறு வேலேந்திய முருகக் கடவுளுக்கு வெறியென்னும் கூத்தை ஆடியது வள்ளி என்னும் துறையாம்.

(எ.டு)

"வேண்டுதியால் நீயும் விழைவோ விழுமிதே ஈண்டியம் விம்ம இனவளையார்-பூண்தயங்கச்