உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

இளங்குமரனார் தமிழ்வளம்

சூலமொ டாடுஞ் சுடர்ச்சடையோன் காதலற்கு வேலனொடு ஆடும் வெறி.”

வாகை அரவம்:

போர் மறவர் பகைவென்று

4

வெள்ளிய வாகைமாலை

யினையும் வலிய வீரக்கழலினையும் சிவந்த கச்சினையும் சூடியது வாகை அரவம் என்னும் துறையாம்.

(எ.டு)

66

அனைய அமருள் அயில்போழ் விழுப்புண்

இனைய இனிக்கவலை யில்லை-புனைக

அழலோ டிமைக்கும் அணங்குடைவாள் மைந்தர்

கழலோடு பூங்கண்ணி கச்சு.

வாகைத்திணை:

பகைவேந்தனைப் போரில் வென்று வாகை மாலை சூடி

ஆரவாரித்தல் வாகைத்திணையாம்.

(எ.டு)

“சூடினான் வாகைச் சுடர்த்தெரியல் சூடுதலும் பாடினார் வெல்புகழைப் பல்புலவர்- கூடார் உடல்வேல் அழுவத் தொளிதிகழும் பைம்பூண் அடல்வேந்தன் அட்டார்த் தரசு.”

வாகையின் இயல்பு:

வாகை' என்னும் புறத்திணை, பாலை என்னும் அகத் ணைக்குப் புறனாகும். அது குற்றமில்லாத கொள்கையை உடைய கூறுபாடுகளை (இயல்பை ) மற்றவரினும் வேறுபாடு உண்டாகுமாறு மிகுதிப் படுத்தல் என்பதாம்.

வாடைப் பாசறை:

மன்னனது

அகன்ற பாசறையிடத்து மறவர்கள் நடுங்குமாறு வந்து வீசித் துன்பம் செய்யும் வாடைக் காற்றினது மிகுதியைச் சொல்லியது வாடைப் பாசறை என்னும் துறையாம். (6.6)

66

வாடை நலிய வடிக்கண்ணாள் தோள்நசை

ஓடை மழகளிற்றின் உள்ளான்கொல்-கோடல்