உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

முகையோ டலம்வர முற்றெரிபோற் பொங்கிப் பகையோடு பாசறையு ளான்.'

வாணாட் கோள்:

335

பகைவரது கேட்டினை எண்ணி, வாளையும் நன்னாளில் புறப்படச் செய்தல் வாணாட் கோளாகும்.

(6.6)

“முற்றரண மென்னு முகிலுருமுப் போற்றோன்றக் கொற்றவன் கொற்றவாணாட் கொண்டான்- புற்றழிந்த

நாகக் குழாம்போ னடுங்கின வென்னாங்கொல் வேகக் குழாக்களிற்று வேந்து”

வாணிக வாகை:

தீவினையினின்றும் விலகித் தொலைவின்கட் சென்ற வணிகனுடைய அறுவகைத் தொழிலையும் உயர்த்திக் கூறியது வாணிக வாகை என்னும் துறையாம்,

(எ.டு)

“உழுது பயன்கொண் டொலிநிரை ஓம்பிப் பழுதிலாப் பண்டம் பகர்ந்து- முழுதுணர் ஓதி அழல்வழிப்பட் டோம்பாத ஈகையான் ஆதி வணிகர்க் கரசு.

வாயில் நிலை:

99

அரண்மனை வாயிலை அடைந்த ஒரு புலவன் தனது வருகையினை மன்னனுக்குச் சென்று மறையாமற் கூறுகவென வாயில் காவலனுக்குக் கூறியது வாயில் நிலை என்னும் துறையாம். (எ.டு)

66

“நாட்டிய வாய்மொழி நாப்புலவர் நல்லிசை

ஈட்டிய சொல்லான் இவனென்று- காட்டிய

காயலோங் கெஃகிமைக்கும் கண்ணார் கொடி மதில் வாயிலோய் வாயில் இசை.”