உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

இளங்குமரனார் தமிழ்வளம்

4

வாயுறை வாழ்த்து: (அ)

எம்மொழி வழி நிற்பின் பின்னே பயன் பெரிதும் விளையும் என, அறிஞர் மேம்பட்ட தமது மெய்ம் மொழியினை மிகுத்துச் சொல்லியது வாயுறை வாழ்த்து என்னும் துறையாம்.

(எ.டு)

“எஞ்சொல் எதிர்கொண் டிகழான் வழிநிற்பிற்

குஞ்சர வெல்படையான் கொள்ளானோ- எஞ்சும்

இகழிடன் இன்றி எறிமுந்நீர் சூழ்ந்த

அகலிடம் அங்கை அகத்து.

வாயுறைவாழ்த்து: (ஆ)

வேம்பையுங் கடுவையும் போன்ற கடுமையான சொற் களைச் சேர்க்காது, இனிய நற்சொற்களை அமைத்துப் பயனுள்ள சொல்லில் பாதுகாப்புச் சொற்களைக் கூறுதலும் வாயுறை வாழ்த்தாகும். (வாயுறை-சொல்மருந்து)

வாயுறை வாழ்த்து: (இ)

கடுஞ்சொற்களைக் கூறுதலின்றிப் பின்னால் விளையும் நன்மையைக் கருதி வேப்பங்காயும், கடுக்காயும் தின்னுங்கால் கசப்பாயிருப்பினும் உண்ட பின்னர் நோய் நீக்கி இன்பந் தருமாறு போல நன்மை யுண்டாதற்குப் பாதுகாவலான சொற் களாலேயே உண்மையைக் கூறுவது வாயுறை வாழ்த்தாகும். (எ.டு)

66

எருமை யன்ன கருங்கல் லிடைதோ றானிற் பரக்கும் யானைய முன்பிற் கானக நாடனை நீயோ பெரும

நீயோ ராகலி னின்னொன்று மொழிவ

லருளு மன்பு நீக்கி நீங்கா

நிரயங் கொள்பவரொ டொன்றாது காவல்

குழவி கொள்பவரி னோம்புமதி

யளிதோ தானேயது பெறலருங் குரைத்தே”