உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

வாயுறை வாழ்த்துப் பாடுவதற்குரிய பாடல்:

337

வாயுறை வாழ்த்து, அவையடக்கியல், செவியறிவுறுத்தற் பொருள் ஆகியவை கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவற்றில் வாரா. ஆசிரியப்பா, வெண்பா ஆகிய இரண்டினும் வரும்.

வாராமைக்கு அழிதல்:

தீ

தீ நிமித்தம் கண்ட தலைவி தலைவன் வாரான் எனக்கருதி வருந்தியது வாராமைக்கு அழிதல் என்னும் துறையாம்.

(எ.டு)

“நுடங்கருவி ஆர்த்திழியும் நோக்கருஞ் சாரல்

இடங்கழி மால்மாலை எல்லைத்- தடம் பெருங்கண் தாரார மார்பன் தமியேன் உயிர்தளர

வாரான்கொல் ஆடும் வலம்.’

வாழ்க்கை புல்லா வல்லாண் பக்கம்:

பொருந்தாத வாழ்க்கையினையுடைய வலிய ஆண்மை யினைப் பொருந்தும் பகுதியாம்.

(எ.டு)

66

'கலிவர லூழியின் வாழ்க்கை கடிந்து

மலிபுகழ் வேண்டு மனத்த- ரொலிகடல்சூழ்

மண்ணகலம் வேண்டாது வான்வேண்டி யீண்டினார்

புண்ணகலாப் போர்க்களத்துப் போந்து”

வாழ்த்து:

நடுகல் நட்டபின் கோயிலாக அமைத்து அதில் அவன் பீடும் பெயருந் தீட்டி அக்கல்லினைத் தெய்வமாக்கி வாழ்த்துதல் வாழ்த்து என்னுந்துறையாம்.

(எ.டு)

"ஆவாழ் குழக்கன்றுய் வித்துக் களத்தவிந்த நீவாழ வாழிய நின்னடுக- லோவாத

விற்கோட்ட நீண்டதோள் வேந்தன் புலிபுறித்த பொற்கோட் டிமயமே போன்று”