உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

வாள்செலவு:

இளங்குமரனார் தமிழ்வளம்

4

வஞ்சியார் போர்க்கழைத்த பின்பு அவர் படையிடத்தே காஞ்சியரசன் வாளினைப் போகவிடுதல் வாள் செலவு என்னுந் துறையாம்.

(எ.டு)

“உணங்கு புலவறா ஒன்னார் குரம்பை

நுணங்கரில் வெம்முனை நோக்கி- அணங்கிய

குந்த மலியும் புரவியான் கூடாதார்

வந்தபின் செல்கென்றான் வாள்”

வாள்நாட் கோள்:

உழிஞை மன்னன் பகைவரது அரணைக் கைப்பற்ற

எண்ணி தனது வாளை நல்ல நாளில் புறவீடு விட்டது வாள்நாட் கோள் என்னும் துறையாம்.

(எ.டு)

66

வாணாட் கொளலும் வழிமொழிந்து வந்தடையாப் பேணார் பிறைதொடும் பேமதிற்-பூணார்

அணிகொள் வனமுலையார் ஆடரங்க மேறிப் பிணிகொள்பே யாடும் பெயர்த்து.

வாள்நிலை:

போருக்குப் புறப்படும் வஞ்சி வேந்தன் தன்வாளை நல்ல நாளில் புறவீடு விட்டது வாள் நிலை என்னுந்துறையாம்.

(எ.டு)

“அறிந்தவர் ஆய்ந்தநாள் ஆழித்தேர் மன்னன்

எறிந்தில ரொள்வா ளியக்கம்- அறிந்தி கலிப் பின் பகலே யன்றியும் பேணா ரகநாட்டு நண்பகலும் கூகை நகும்”

வாள்மங்கலம்: (அ)

இருபெரு வேந்தருள்ளும் வென்றவன் வாளினை வெற்றித் திருவின் மேல் நிறுத்தி நீராட்டுவது வாள்மங்கலமாகும்.