உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

புறப்பொருள்

339

“செற்றவர் செங்குருதி யாடற்கு வாள்சேர்ந்த

கொற்றவை மற்றிவையுங் கொள்ளுங்கொள்- முற்றியோன் பூவொடும் சாந்தும் புகையவி நெய்ந்நறைத் தேவொடு செய்தான் சிறப்பு"

வாள்மங்கலம்: (ஆ)

கடல் போன்ற பெரிய படை

பரிய படையினையும் வலிய யா

யினையும் உடைய வேந்தனது கொற்றவாளைப் புகழ்ந்தது வாள் மங்கலம் என்னும் துறையாம்.

(எ.டு)

“கொங்கவிழ் ஐம்பால் மடவார் வியன்கோயில்

மங்கலம் கூற மறங்கனலும்- செங்கோல்

நிலந்தரிய செல்லும் நிரைதண்தார்ச் சேரன் வலந்திரிய ஏந்திய வாள்.'

வாள் மண்ணுநிலை:

وو

உயர்ந்தோர்கள் வாழ்த்துரை வழங்க கடவுள் நீரினால் முழுக்காட்டிய உழிஞையரசனது கொற்றவாளினது மறப்பண் பினைச் சொல்லியது வாள்மண்ணுநிலை என்னும் துறையாம். (எ.டு)

66

“தீர்த்தநீர் பூவொடு பெய்து திசைவிளங்கக்

கூர்த்தவாள் மண்ணிக் கொடித்தேரான்-பேர்த்தும்

இடியார் பணைதுவைப்ப இம்மதிலுள் வேட்டான் புடையார் அறையப் புகழ்.

வாளோர் ஆடும் அமலை:

யானை மீது வருகின்ற பகைவனை எதிர்த்து, அவன் யானையைக் கொன்று, அவனுடன் போரிடும் படை வீரர்களின் பெருமையே வாளோர் ஆடும் அமலையாகும்.

(எ.டு)

66

ஆளுங் குரிசி லுவகைக் களவென்னாம்

கேளன்றிக் கொன்றாரே கேளாகி- வாள்வீசி