உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

இளங்குமரனார் தமிழ்வளம்

4

யாடினா ரார்த்தா ரடிதோய்ந்த மண்வாங்கிச் சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து

விளக்கு நிலை: (அ)

விளக்கு நிலையாவது, விளக்கு எரியும் திறத்திற்கு ஏற்ப வேலின் வெற்றியைக் கூறுவது விளக்கு நிலையாகும்.

(எ.டு)

“மைமிசை யின்றி மணிவிளக்குப் போலோங்கிச் செம்மையி னின்றிலங்குந் தீபிகை- தெம்முனையுள் வேலினுங் கோடாது வேந்தன் மனைவிளங்கக் கோலினுங் கோடா கொழுந்து”

விளக்குநிலை: (ஆ)

கடல்போன்ற படையினையுடைய அரசனது திருவிளக்கின் தன்மையைச் சொல்லியது விளக்குநிலை என்னும் துறையாம்.

(எ.டு)

“வளிதுரந்தக் கண்ணும் வலந்திரியாப் பொங்கி

ஒளிசிறந் தோங்கி வரலால்- அளிசிறந்து

நன்னெறியே காட்டும் நலந்தெரி கோலாற்கு வென் னெறியே காட்டும் விளக்கு.

விளக்குநிலை: (இ)

பொன்னணிகளால் சிறந்து விளங்கும் வேந்தனைக் கதிரவ னோடு ஒப்பிட்டுக் கூறுதலும் விளக்கு நிலை என்னும் துறையாம். (எ.டு)

“வெய்யோன் கதிர்விரிய விண்மேல் ஒளியெல்லாம்

மையாந் தொடுங்கி மறைந்தாங்கு- வையகத்துக் கூத்தவை யேத்துங் கொடித்தேரான் கூடியபின் வேத்தவையுள் மையாக்கும் வேந்து.

விறலிகேட்பத் தோழிகூறல்:

பாணனுடைய ய பாணிச்சிக்கு, தலைவனுக்குத் தன்னை விரும்பிய பரத்தையருடைய முயக்கம் பெறற்கரிய அமிழ்தத் தோடொக்கும் என்று தோழி சொல்லியது விறலி கேட்பத் தோழி கூறல் என்னும் துறையாம்.