உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

66

புறப்பொருள்

"அரும்பிற்கும் உண்டோ அலரது நாற்றம் பெருந்தோள் விறலி பிணங்கல்- சுரும்போடு அதிரும் புனலூரற் காரமிர்தம் அன்றோ முதிரும் முலையார் முயக்கு.

விறலி தோழிக்கு விளம்பல்:

341

தலைவனது முதுமையும் அப்பரத்தையர்க்குப் பெறுதற்கரிய மகிழ்ச்சியை உண்டாக்கும் என்று பாணிச்சி தோழி கேட்பச் சொல்லியது விறலிதோழிக்கு விளம்பல் என்னும் துறையாம்.

(எ.டு)

“உளைத்தவர் கூறும் உரையெல்லாம் நிற்க

முளைத்த முறுவலார்க் கெல்லாம்- விளைத்த பழங்கள் அனைத்தாய்ப் படுகளி செய்யும் முழங்கு புனலூரன் மூப்பு.

விறலியாற்றுப் படை:

வெற்றியை யுடைய மன்னனது புகழைப் பாடும் விறலியை ஒருவள்ளலிடத்து ஆற்றுப் படுத்துவது விறலியாற்றுப் படை

என்னும் துறையாம்.

(எ.டு)

“சில்வளைக்கைச் செவ்வாய் விறலி செருப்படையான் பல்புகழ் பாடிப் படர்தியேல்- நல்லவையோர்

ஏத்த விழையணிந் தின்னே வருதியாற்

பூத்த கொடிபோற் பொலிந்து."

வினைமுதிர்ச்சி(முற்றியமுதிர்வு):

புறத்தோன் தன் படையைச் செலுத்திப் புறமதிலிற் செய்யும் போரின்றி அகத்தோன் படையை வென்று அப்புற மதிலைக் கைக் கொண்டு உள்மதிலை வளைப்பது வினைமுதிர்ச்சி யாகும்.

(எ.டு)

“கடல்பரந்து மேருச்சூழ் காலம் போற் சென்றோர்

கொடிமதில் காத்தோரைக் கொல்லக்- கடலெதிர்