உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இளங்குமரனார் தமிழ்வளம்

4

எகரவினாவின் முன் நாற்கணமும் புணர்தல் :

எகரவினாவிடைச் சொல்லின் முன்னே உயிரெழுத்து களும், யகரமும் வந்தால் வகரமெய் தோன்றும் யகரம் ஒழிந்த மெய்கள் வந்தால் அவ்வந்த மெய்களே தோன்றும்.

(எ.டு) எ + அணி

=

எவ்வணி

எ + குதிரை

=

எக்குதிரை

எ+

=

நாடு எந்நாடு

6T + யானை எவ்யானை

=

‘எகின்' என்பதற்குச் சிறப்பு விதி :

அன்னப் பறவையின் பெயராகிய எகின் என்னுஞ்சொல் அல்வழியில் இயல்பாதலேயன்றி, வேற்றுமைப் புணர்ச்சியிலும் வல்லினம் வர இறுதி னகரம் இயல்பாதலும், இரு வழியிலும் ரு அகரச் சாரியை பொருந்த வல்லெழுத்தாவது அதற்கு இனமான மெல்லெழுத்தாவது மிகுதலும் விதியாகும்.

(எ.டு) எகின் + சிறை

=

எகின்சிறை

எகின் + தலை

=

எகின்தலை

எகின் + புள்

=

எகினப்புள்

=

எகினம்புள்

எச்சம் :

பிறிதோர் சொல்லொடும், பிறிதோர் குறிப்பொடும் முடிவு கொள்ளும் இயற்கையைப் பொருந்திய செய்யுள் எச்சமாகும். எனவே, எச்சம் சொல்லெச்சம் குறிப்பெச்சம் என இருவகைப்படும்.

(எ.டு) எச்சம் = குறைச் சொல்;

பிறிதொன்றைத் தழுவும் சொல்

எச்சத் தொடர் மொழி :

முடிவு பெறாது முற்றுத்தொடர் மொழிக்கு உறுப்பாக வருந்தொடர் மொழி, எச்சத் தொடர் மொழியாகும்.

(எ-டு) யானைக் கோடு

யானையது கோடு