உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

எட்டாம் வேற்றுமை உருபுகள் ஏற்கும் பொருள் :

21

எட்டாம் வேற்றுமை உருபுகள் தம்மையேற்ற பெயர்ப் பொருளை முன்னிலையின் விளிக்கப்படு பொருளாக வேறு படுத்தும். அவ்வாறு வேறுபட்ட விளிக்கப்படு பொருளே இவ்வுருபுகளின் பொருளாகும்.

(எ.டு) சாத்தனே கேளாய்

ஏ மிகுந்தது

அப்பனோ உண்ணாய்

ஓ மிகுந்தது

வேனிலாய் கூறாய்

ஈறு திரிந்தது

தோழ செல்லாய்

தந்தை வாராய்

மக்காள் கூறீர்

எட்டாம் வேற்றுமையின் உருபுகள் : உ

ஈறுகெட்டது

ஈறுஇயல்பாயிற்று

ஈற்றயலெழுத்துத்

திரிந்தது

எட்டாம் வேற்றுமையினுடைய உருபுகள், படர்க்கைப் பெயரீற்றில் ஏ, ஓ மிகுதலும் அவ்வீறு திரிதலும், கெடுதலும் இயல்பாதலும், ஈற்றயல் எழுத்துத் திரிதலுமாம்.

எட்டு என்பதற்குச் சிறப்பு வழி :

இறுதியுயிர் மெய்கெட நின்ற எட்டென்னும் எண்ணியது டகர மெய், வன்கணம், மென்கணம், இடைக்கணம், உயிர்க்கணம் ஆகிய நான்கு கணமும் வர ணகரமாகத் திரியும்.

(எ.டு) எட்டு + ஆயிரம்

=

எண்ணாயிரம்

எட்டு + கழஞ்சு

=

எண்கழஞ்சு

எட்டு + வகை

= எணவகை

எட்டு + நாழி

=

எண்ணாழி

)

எண்ணுப் பெயரோடு எண்ணுப் பெயர் புணர்தல் :

6

ஒன்று என்னும் எண் முதலாக எட்டு என்னும் எண் இறுதியாகவுள்ள எல்லா எண்ணுப் பெயர்களும், பத்து என்னும் எண்ணுப் பெயர்முன் வரின் அப்பத்து என்னும் சொல்லில் உள்ள குற்றியலுகரம் தான் ஏறிநின்ற மெய்யோடும் கெட்டு முடியும்.