உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ்வளம்

(எ.டு) பத்து + ஒன்று

=

பதினொன்று

பத்து + இரண்டு

=

பன்னிரண்டு

பத்து + மூன்று

=

பதின்மூன்று

பத்து + நான்கு = பதினான்கு

பத்து + ஐந்து

பதினைந்து

பத்து + ஆறு = பதினாறு

பத்து + ஏழு

=

பதினேழு

பத்து + எட்டு =

=

பதினெட்டு

4

எண்ணுப் பெயர்முன் நிறைப்பெயரும் அளவுப் பெயரும் புணர்தல்:

பத்து என்னும் எண்ணுப்பெயர்முன் நிறையும் அளவும் வருங்காலத்து இன் என்னும் சாரியை பெற்று முடியும்.

பதின்கழஞ்சு

(எ.டு) பத்து + கழஞ்சு

=

பத்து + தொடி

=

பதின்றொடி

பத்து + பலம்

=

பதின்பலம்

=

பதின்கலம்

=

பதின்பானை

பத்து + கலம்

பத்து + பானை

எதிர்காலங்காட்டும் விகுதிகள் :

இ' என்னும் முன்னிலை வினைமுற்று விகுதி ஒன்றும், ப, மார் என்னும் படர்க்கை வினைமுற்று விகுதியிரண்டும், க, இய, இயர், அல் என்னும் வியங்கோள் வினைமுற்று விகுதி நான்கும், ஆய், இ, ஆல், ஏல், காண், மின், உம், ஈர் என்னும் முன்னிலையேவல் வினைமுற்று விகுதியெட்டும் ஆ பதினைந்தும் எதிர்காலங்காட்டும் விகுதிகளாகும்.

(எ.டு) சேறி, நடப்ப, நடமார், வாழ்க, வாழிய, வாழியர், உண்ணல், நடவாய், உண்ணுதி, மறால், அழேல், சொல்லிக்காண், நடமின், உண்ணும், உண்ணீர்.

எதிர்மறைக் குறிப்பு வினைப் பெயரெச்சங்கள் :

கிய

இவை, அல் இல் என்னும் பண்படியாகத் தோன்றி ஆகாரச் சாரியையுந் தகர வெழுத்துப் பேற்றோடு கூடிய அகர விகுதியும் பெற்று வரும்.