உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

(எ.டு) அல்லாத குதிரை, இல்லாத பொருள்

23

இவை, அல்லாக் குதிரை, இல்லாப் பொருள் என ஈற்றுயிர்மெய் கெட்டுவரும்.

எதிர்மறை இடைநிலை :

இல், அல், ஆ என்னும் மூன்றும் ஆ

எதிர்மறையிடை நிலைகளாகும். இவற்றுள் ஆகாரவிடைநிலை, வருமெழுத்து மெய்யாயிற் கெடாதும் உயிராயிற்கெட்டும் வரும்.

(எ.டு) நடந்திலன் நடக்கின்றிலன் நடக்கிலன் நடவாதான் நடவான் நடவேன்.

எதிர்கால இடை நிலை :

பகர மெய்யும், வகரமெய்யும் ஆண்பால் முதலிய ஐந்து பால்களிலும் தன்மை முதலிய மூன்று இடங்களிலும் நிகழ் காலத்தைக் காட்டுகின்ற வினைப் பகுபதங்களின் இடைநிலை

களாம்.

எதிர்மறைத் தெரிநிலை வினைப் பெயரெச்சங்கள் :

இவை எதிர்மறை ஆகாரவிடை நிலையும் தகரவெழுத்துப் பேற்றோடு கூடிய அகரவிகுதியும் பெற்றுவரும்.

(எ.டு) செய்யாத

எதிர்மறைக் குறிப்பு வினையெச்சங்கள் :

இவை, அல் இல் என்னும் எதிர்மறைப் பண்படியாகத் தோன்றி - றி, து, மல், மே, மை, ஆல், கால், கடை, வழி, இடத்து என்னும் விகுதிகளைப் பெற்று வரும்.

(எ-டு) றி

_

அறமன்றிச் செய்தான்

அருளன்றிச் செய்தான்

து அறமல்லாதில்லை அருளில்லாது செய்தான்

எதிர்மறைத் தெரிநிலை வினையெச்சங்கள் :

வை எதிர் மறை ஆகார விடை நிலையோடு உ, மல், மே, மை, மைக்கு, கால், கடை, வழி, இடத்து என்னும் விகுதிகளைப் பெற்று வரும்.

எழுத்தின் சாரியைகள் :

தனி மெய்கள் அ என்னும் சாரியை பெறும். உயிர் நெடில்கள் காரம் என்னும் சாரியை பெறும். ஐகார ஔகாரங்கள் காரம்