உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ்வளம்

ன்

4

என்னும் சாரியையுடன் கான் என்னும் சாரியையும் பெறும். உயிர்க்குறிலும், உயிர்மெய்க்குறிலும் காரம் கான் என்னும் சாரியையுடன் கரம் என்னும் சாரியையும் பெறும்.

எழுத்துகளின் பிறப்பின் பொதுவிலக்கணம் :

ஒலியெழுத்திற்கு வேண்டுங் காரணங்களிற் குறை வில்லாமல் உயிரினது முயற்சியால் உள்ளே நின்ற காற்றானது எழுப்ப எழுகின்ற செவிப்புலனாம் அணுக்கூட்டம், மார்பும், கழுத்தும், தலையும் மூக்கும் ஆகிய நான்கிடத்தையும் முதலிற் பொருந்தி, பின்பு உதடும் நாக்கும் பல்லும் வாயும் ஆகிய நான்கினுடைய முயற்சி வேறுபாட்டினால், வேறு வேறு வகைப் பட்ட எழுத்தாகிய ஓசைகளாய்த் தோன்றுதல் பிறப்பாம்.

எழுத்தும் எழுத்துவகையும் :

சொற்கள் உண்டாவதற்கு முதற் காரணமாயும் அணுத்திரல் களின் காரியமாயும் உள்ள ஒலியே எழுத்து எனப்படும். அவ்வெழுத்து முதல் எழுத்து சார்பெழுத்து என வகைப்படும்.

எழுத்துகளுக்குரிய மாத்திரைகள் :

இ ரு

உயிரளபெடைக்கு மாத்திரை மூன்று. நெட்டெழுத்திற்கு மாத்திரை இரண்டு. ஐகாரக்குறுக்கத்திற்கு மாத்திரை ஒன்று. ஔகாரக்குறுக்கத்திற்கு மாத்திரை ஒன்று. ஒற்றளபெடைக்கும் மாத்திரை ஒன்று. குற்றெழுத்திற்கு மாத்திரை ஒன்று. மெய்யெழுத் திற்கும், குற்றியலுகரத்திற்கும், குற்றியலிகரத்திற்கும், முற்றாய்தத் திற்கும் தனித்தனியே அரை மாத்திரையாகும். மகரக் குறுக்கத் திற்கும், ஆய்தக் குறுக்கத்திற்கும் தனித்தனியே மாத்திரை காலாகும்.

‘என்’ என்பதற்குச் சிறப்பு விதி :

என் என்னும் வேறுபாட்டு மொழியின் இறுதி னகரம் வல்லினம் வரின் ஒருபோது திரிந்தும் ஒரு போது திரியாதும் வரும்.

(எ.டு) என் + பகை

என்பகை, எற்பகை.

(யான், நான் என்பவை ‘என்' என வேறுபடுதல்)