உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

‘ஏ’ என்னும் சாரியை பெறும் அளவுப் பெயர்கள் :

25

உயிரையும் மெய்யையும் இறுதியாகவுடைய எண்ணுப் பெயர், நிறைப்பெயர், அளவுப்பெயர்களின் முன், அவ் வவற்றிற்குக் குறைந்த அவ்வப் பெயர்கள் வரின், பெரும்பாலும் `ஏ' என்னும் சாரியை பெறும்.

(எ.டு) ஒன்று + கால் = ஒன்றேகால்

தொடி + கஃசு

=

தொடியேகஃசு

கலன் + பதக்கு

=

கலனேபதக்கு

கால் + காணி

=

காலேகாணி

கழஞ்சு + குன்றி = கழஞ்சேகுன்றி

உழக்கு+ ஆழாக்கு =

=

உழக்கேயாழாக்கு

ஏகாரம் பிறக்குமிடம் :

வாய் திறத்தலுடனே

மேல்வாய்ப்பல்லை

அடிப்பாகம் பொருந்த ஏகாரம் பிறக்கும்.

நாக்கின்

‘ஏழ்’ என்னும் எண்ணுப்பெயர் முன் அளவுப் பெயர் புணர்தல் : ஏழ் என்னும் எண்ணுப்பெயர் முன் அளவுப் பெயர் வருமொழியாய் வருமிடத்து நெடுமுதல் குறுகலும் உகரம் பெறுதலும் ஆகும்.

(எ.டு) ஏழ் + பலம்

=

எழுபலம்

ஏழ் + கழஞ்சு

=

எழுகழஞ்சு

‘ஏழ்’ என்னும் எண்ணின் முன் நிறைப்பெயர் புணர்தல் :

ஏழ் என்னும் எண்ணுப்பெயர் முன் நிறைப் பெயர் வருமொழியாய் வருமிடத்து நெடு முதல் குறுகலும் உகரம் பெறுதலும் ஆகும்.

(எ.டு) ஏழ் + கலம் = எழுகலம்

‘ஏழ்’ என்னும் எண்ணுடன் பத்து என்னும் எண் புணர்தல் :

ஏழ் என்பதனோடு பத்து என்னும் எண் புணருமிடத்து அப் பத்து என்னும் சொல்லின் இடை யொற்றுக் கட்டு ஆய்தமாகிய புள்ளி நிற்றல் வேண்டும்.

(எ-டு) ஏழு + பத்து

=

எழுபஃது ழூ எழுபது