உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ்வளம் 4

‘ஏழ்’ என்னும் எண்ணுடன் ஆயிரம் புணர்தல் :

ஏழ் என்பதன் முன் ஆயிரம் என்னும் எண் வந்து புணரு மிடத்து உகரம் பெறாது முடியும்.

(எ.டு) ஏழாயிரம்.

‘ஏழ்’ என்னும் எண்ணின் முன் ஐ, அம், பல் என்பன புணர்தல்:

ஏழ் என்னும் எண்ணின் முன் ஐ என்றும் அம் என்றும் பல் என்றும் வருகின்ற இறுதிகளையுடைய பொருட்பெயர் அல்லாத எண்ணுப் பெயராகிய தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பன வந்தால் நெடுமுதல் குறுக்கம் இன்றி உகரம் பெறாது இயல்பாய் முடியும்.

(எ.டு) ஏழ்தாமரை, ஏழ்வெள்ளம், ஏழாம்பல்.

‘ஏழ்' என்பதன் முன் நூறாயிரம் என்னுஞ்சொல் புணர்தல் :

ஏழ் என்பதன் முன் நூறாயிரம் என்னுஞ்சொல் புணருங்கால் நெடுமுதல் குறுகாதும் உகரம் பெறாதும், இயல்பாய் முடியும். (எ.டு) ஏழ் + நூறாயிரம் =

=

ஏழ்நூறாயிரம்.

‘ஏழ்' என்பதன் முன் உயிர் புணர்தல் :

ஏழ் என்பதன் முன் உயிர் முதல் மொழி முன் வரினும் நெடுமுதல் குறுகாதும் உகரம் பெறாதும் முடியும்.

(எ.டு) ஏழகல், ஏழுழக்கு, ஏழொன்று, ஏழிரண்டு.

‘ஏழ்’ என்னும் எண்ணுப் பெயர் முன் எண்ணுப்பெயர் புணர்தல் : ஏழ் என்னும் எண்ணுப்பெயர் முன் எண்ணுப் பெயர் வருமொழியாய் வருமிடத்து நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலும் ஆகும்.

(எ.டு) ஏழ் + மூன்று = எழுமூன்று.

'ஐ' என்னும் விகுதி உணர்த்தும் பொருள்கள் :

ஐ என்னும் விகுதி வினைமுதற்பொருளையும் செயப்படு பொருளையும் கருவிப் பொருளையும் உணர்த்தும்.

(எ-டு) பறவை

வினைமுதற் பொருள்

தொடை- செயப்படுபொருள்

பார்வை

கருவிப்பொருள்