உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

வெட்சித் திணையின் இலக்கணம்:

பகையரசர்கள்

மீது

343

படையெடுத்துச் செல்லுதற்கு முன்னாலேயே, அரசனால் விடப்பட்ட முனை ஊரகத் துள்ளார், அப்பகைவர்கள் நாட்டுட் சென்று, அந்நாட்டுப் பசுக்கூட்டங்களை அப்பகைவர்கள் அறியாதவாறு ஓட்டிக் கொண்டு வந்து பாதுகாத்தற்கு வெட்சித்திணை என்று பெயர். வெருவருநிலை:

ஒரு மறவன் உடல், போர்க்களத்தில் பகைவரது வில் உமிழ்ந்த அம்புகள் அவனது அகன்ற மார்பினைப் பிளப்ப, அவ்வுடல் அவ்வம்புகளால் தாங்கப் பட்டு நிலத்தைத் தீண்டாத படி நின்ற நிலையைக் கூறியது வெருவருநிலை என்னும் துறையாம்.

(எ.டு)

“வெங்கண் முரசதிரும் வேலமருள் வில்லுதைப்ப எங்கும் பருமத் திடைக்குளிப்பச்- செங்கண்

புலவாள் நெடுந்தகை பூம்பொழில் ஆகம்

கலவாமற் காத்த கணை.

வெளிப்பட இரத்தல்:

நலத்தைப் புணர்ச்சி

தழையாடை அணிந்த தலைவியினது அழகிய பெண்மை புணர்ச்சி இன்மையான் உண்டான துன்பம் அதிகரிக்க இரந்து கூறியது வெளிப் பட இரத்தல் என்னும் துறையாம்.

(61.6)

“உரவொலி முந்நீர் உலாய் நிமிர்ந் தன்ன

கரவரு காமம் கனற்ற- இரவெதிர

முள்ளெயி றிலங்கு முகிழ் நகை

வெள்வளை நல்கான் விடுமென் உயிரே.'

வெள்ளிநிலை:

மன்னனை நோக்கி, நினது செங்கோன்மை காரணமாக வெள்ளிக்கோள் நன்னிலையுடைத்தாகலின் மழை பொழியும் என்றது வெள்ளி நிலை என்னும் துறையாம்.