உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

(எ.டு)

66

இளங்குமரனார் தமிழ்வளம்

‘சூழ்கதிர் வான்விளக்கும் வெள்ளி சுடர்விரியத் தாழ்புயல் வெள்ளந் தருமரோ- சூழ்புரவித்

தேர்விற்றார் தாங்கித் திகழ்விலங்கு வேலோய் நின் மார்விற்றார் கோலி மழை.

வெறியாட்டு:

4

தலைவி தலைவன் அளி செய்தற் பொருட்டுத்தாய் அறியாதபடி முருகனுக்கு வெறிக் கூத்தாடியது வெறியாட்டு என்னும் துறையாம்.

(எ.டு)

“வெய்ய நெடிதுயிரா வெற்பன் அளிநினையா ஐய நனிநீங்க ஆடினாள்-மையல்

அயன்மனைப் பெண்டிரொ டன்னைசொல் அஞ்சி

வியன்மனையுள் ஆடும் வெறி.”

வென்றோர் விளக்கம்:

இருபெரு வேந்தருள் ஒருவர், ஒருவர் மிகை கண்டு அஞ்சிக் கருமச் சூழ்ச்சியாற்றிறை கொடுப்ப அதனை வாங்கினார்க்கு உளதாகிய விளக்கத்தைக் கூறுவது வென்றோர் விளக்கம் என்னுந்துறையாம்.

(எ.டு)

“இருங்கண்யானை யோடருங்கலந் தெறுத்துப்

பணிந்துகுறை மொழித லல்லது பகைவர்

வணங்கா ராதல் யாவதோ மற்றே”

வேட்கை முந்துறுத்தல்:

தலைவன் தனது வேட்கையைக் கூறுவதற்கு முன்னே, தலைவி தனது வேட்கையைத் தலைவனிடம் கூறுதல் வேட்கை முந்துறுத்தல் என்னும் துறையாம்.

(61.6)

“எழுதெழில் மார்பம் எனக்குரித் தாகென்று

அழுதழுது வைகலும் ஆற்றேன்- தொழுதிரப்பல்