உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

வல்லியம் அன்ன வயவேலாய் வாழ்கென அல்லியந்தார் நல்கல் அறம்.”

வேத்தியன் மலிபு:

345

கரந்தை மறவர் வலிமை மிக்க மறமன்னனைப் புகழ்ந்து

கூறியது .

(எ.டு)

66

“அங்கையுள் நெல்லி அதன்பயம் ஆதலாற்

கொங்கலர் தாரான் குடைநிழற்கீழ்த்- தங்கிச் செயிர்வழங்கும் வாளமருட் சென்றடையார் வேல்வாய்

உயிர்வழங்கும் வாழ்க்கை உறும்.

கஉ

வேந்தன் சிறப்பு எடுத்துரைத்தல்:

வேந்தற்குரிய புகழ் அமைந்த தலைமைகளை ஒருவற்கு உரியவாக அவன்தன் படையாளரும் பிறருங் கூறுதல். (எ.டு)

“அத்த நண்ணிய நாடு கெழு பெருவிறல்

கைப்பொருள் யாதொன்று மிலனே நச்சிக்

காணிய சென்ற இரவன் மாக்கள்

களிறொடு நெடுந்தேர் வேண்டிங் கடல

வுப்பொய் சாகாட் டுமணர் காட்டக்

கழிமுரி குன்றத் தற்றே

யெள்ளமை வின்றவ னுள்ளிய பொருளே'

வேம்பு:

பாண்டியன் போர்க்களத்தின்கண் தமக்கு அடையாளமாக அணிந்து கொள்ளும் வேம்பினைப் புகழ்ந்தது வேம்பு என்னும் துறையாம்.

(6.6)

“தொடையணிதோள் ஆடவர் தும்பை புனையக்

கொடியணிதேர் கூட்டணங்கும் போழ்தின்- முடியணியும் காத்தல்சால் செங்கோற் கடுமான் நெடுவழுதி

ஏத்தல்சால் வேம்பின் இணர்.'