உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ்வளம்

4

ஐந்து என்பதற்குச் சிறப்பு விதி :

இறுதியுயிர்மெய் கெட நின்ற ஐந்தென்னும் எண்ணினது நகரமெய், வருமொழியில் மெல்லினம் வருமிடத்து வருமெய்யாகத் திரியும். வல்லினம் வருமிடத்து இனமாகத் திரியும். உயிரும் இடையினமும் வருமிடத்துக் கெடும்.

(எ.டு) ஐந்து + மூன்று ஐம்மூன்று நகரமெய்,

வருமெய்யாகத் திரிந்தது.

ஐந்து + பால் = இனமாயிற்று.

=

ஐம்பால் நகரமெய்வரும் எழுத்திற்கு

ஐந்து + ஆயிரம்

=

ஐயாயிரம்

ஐந்து + வகை

=

ஐவகை

}

நகர மெய் கெட்டது

ஒத்து நடத்தல் :

ஒரோவிடத்து மொழிக்கு முதலிலும் சிலவிடத்து ஐகாரத்தின் பின்னும், யகர வொற்றின் பின்னும், நகரம் நின்ற விடத்து ஞகரம் வந்து பொருள் வேறுபடாதவாறு ஒத்து நடக்கும்.

(எ.டு) நண்டு

நெண்டு

=

ஞண்டு ஞெண்டு

நமன்

=

ஞமன்

மொழி முதல் ஒத்து நடந்தது

ஐகாரத்தின் பின்

ஒத்து நடத்தல்

சேய்நலூர்

சேய்ஞலூர்

செய்ந்நின்ற நீலம்

யகரத்தின் பின்

ஐந்நூறு - ஐஞ்ஞூறு

மைந்நின்றகண்

மல்கின்றகண்}

செய்ஞ்ஞின்ற நீலம்) ஒத்து நடத்தல்

ஒரு பாலைக் குறிப்பது பிறபாலுக்கும் வருவது :

ஆண், பெண், பலர், ஒன்று, பல என்னும் ஐம்பாலில் ஒருபாலைக் குறித்தனவாயினும் ஏனைய பால்களையும் குறித்து வருவது உலக வழக்கமாகும்.

(எ.டு) அவன் வந்தான்; அவள் வந்தாள்; அவர் வந்தார்;

அது வந்தது; அவை வந்தன;

அவன் வாழ்க; அவள் வாழ்க;

பால் பருகியவன் வலிமை பெறுவான்; பெறுவாள்;...