உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒற்றளபெடை :

எழுத்து

29

செய்யுளில் ஓசை குறையுமிடத்துச் சொல்லின் இடையிலும் கடையிலும் நிற்கும் ங், ஞ், ண், ந், ம், ன், ய், ல், வ், ள் என்னும் பத்து மெய்களும், ஆய்த எழுத்தும் அவ்வோசையை நிறைக்கத் தம் அளவில் நீண்டு ஒலிக்கும். அவ்வாறு நீண்டு ஒலிப்பதைக்குறிக்க, அவற்றின் பின் அவ்வவ்வெழுத்துகளே அறிகுறியாக எழுதப் படும். இவ்வாறு ஒற்றெழுத்துகள் தம் ஓசையளவில் மிகுந்து ஒலிப்பது ஒற்றளபெயடையாகும். இவ்வொற்றளபெடை ஒரு குற்றெழுத்தின் கீழும் இரண்டு குற்றெழுத்தின் கீழும் வரும். குறிலிணைக் கீழிடை, குறிற்கீழிடை, குறிலிணைக் கீழ்க்கடை, குறிற் கீழ்க்கடை என்னும் நான்கிடத்தும் மேற்கூறிய பதினோர் எழுத்தும் அளபெடுககும். எனவே ஒற்றளபெடை நாற்பத்து நான்காம். ஆனால் ஆய்தம் மொழியின் இடையில் மட்டுந்தான் வரும். ஆதலால் ஆய்தத்திற்கு மட்டும் குறிலிணைக் கீழ்க்கடை குறிற்கீழ்க்கடை என்னும் இரண்டு டத்தையும் விலக்க வேண்டும். விலக்கினால் ஒற்றளபெடை நாற்பத்திரண்டாம்.

(எ.டு)

இலங்ங்கு வெண்பிறை

மடங்ங் கலந்த

கண்ண் கருவிளை

பொன்ன் பொறி

ஒற்று இடையே மிகும் நெடிற்றொடர் உயிர்த்தொடர் :

நெடிற்றொடர்களும் உயிர்த்தொடர்களுமாகிய குற்றியலுகர மொழிகளுள் அவ்வுகரம் ஏறிநின்ற டகர, றகரமெய்கள்

வேற்றுமைப் புணர்ச்சியில் பெரும்பாலும் இரட்டும்.

(எ.டு) ஆட்டுக்கால்

சோற்றுவளம்

நடிற்கு

நடிற்றொடர்

உயிர்த்

முரட்டுமனிதன் )யிர்த்தொடர்

வயிற்றிடை

ஒன்றன் பாற் படர்க்கை வினைமுற்று :

துறுடு

து று டு என்கின்ற குற்றியலுகரவீற்று மூன்று விகுதி களையும் இறுதியில் உடைய மொழிகள் அஃறிணை ஒன்றன் பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு முற்றும் ஆம். இவற்றுள் டு என்ற விகுதி குறிப்பு என்ற விகுதி குறிப்பு வினைமுற்றில் வரும்