உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

31

காலங்காட்டும் பகுதி :

கு, டு, று என்னும் மூன்றுயிர் மெய்களை இறுதியாக வுடைய சில குறிலிணைப் பகுதிகள் வேறுபட்டு இறந்தகாலங் காட்டும்.

(எ.டு) புக்கான், விட்டான், பெற்றான்.

காண்டிகை யுரையின் இலக்கணம் :

கருத்துரையும்

பதவுரையும்

எடுத்துக்காட்டுமாகிய

மூன்றனையுஞ் சொல்லுதலாலும் அம்மூன்றனோடு வினா விடை என்னும் இரண்டனையுங் கூட்டிச் சொல்லுதலாலும் சூத்திரத்துளிருக்கின்ற பொருளை விளக்குவன காண்டிகையுரை

யாகும்.

காலங்காட்டு மிடைநிலைகள் :

காலங்காட்டு மிடை நிலைகள், தெரிநிலைவினைப் பகுபதங் களுக்கு வரும். அவை இறந்தகால விடைநிலை, நிகழ்கால விடை நிலை, எதிர்கால விடை நிலை என மூன்று வகைப்படும்.

‘கீழ்’ என்பதற்குச் சிறப்புவிதி :

கீழ் என்னுஞ் சொல்லின் முன் வருகிற வல்லினம் ஒரு கால் இயல்பாகியும், ஒரு கால் மிக்கும் வரும்.

(எ.டு) கீழ் + குளம் = கீழ்குளம், கீழ்க்குளம்

குணசந்தி :

வடசொற்களில், அ ஆ வின்முன்

ஈ வரின் ஈறு

முதலுங்கெட ‘ஏ’ தோன்றுவதும், அ, ஆ வின் முன் உ ஊ வரின் ஈறும் முதலுங்கெட 'ஓ' தோன்றுவதும் குணசந்தி எனப்படும். (எ-டு) நர + இந்திரன் நரேந்திரன்

சுர + ஈசன் சுரேசன்

தரா + இந்திரன்

தரேந்திரன்

மகா + ஈசன் மகேசன்

பாத + உதகம் - பாதோகம்

ஞான + ஊர்ச்சிதன் ஞானோர்ச்சிதன்

கங்கா + உற்பத்தி

கங்கோற்பத்தி

தயா + ஊர்ச்சிதன்

தயோர்ச்சிதன்.