உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ்வளம்

4

குயின் என்பதற்குச் சிறப்புவிதி :

குயின் என்னும் பெயரின் இறுதி னகரம் வேற்றுமையில் இயல்பேயாகும்.

(எ.டு) குயின் + கடுமை OLD = = குயின்கடுமை

குயின் + சிறுமை

குயின்சிறுமை

குறிலணைந்த ஆகாரத்துக்குச் சிறப்பு விதி :

குற்றெழுத்தின்

கீழ் நின்ற ஆகாரம்

அகரமாகக்

குறுகுதலும், அவ்வாறு குறுகுதலுடன் உகரம் பெறுதலும், இயல்பாதலும் ஆகிய மூன்று விதியும் செய்யுளில் வரும்.

(எ.டு) “நிலவிரிகானல்

குற்றியலுகரம் :

(நிலா)

குறியதன் கீழ் ஆ குறுகிற்று.

“என் செய்யுமோ நிலவு” - குறுகி உகரமேற்றது. “நிலா வணங்கு” இயல்பாயிற்று.

தனிநெடில், ஆய்தம், உயிர், வல்லினம், மெல்லினம், டையினம் ஆகிய இவற்றுள் ஒன்று ஈற்றுக்கு அயலெழுத்தாய்த் தொடர்ந்து வர, வல்லின மெய்களின் மேல் ஊர்ந்து வரும் உகரம் குற்றியலுகரமாகும். இவ்வுகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிற் குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும்.

(எ.டு) நாடு, அஃது, வயிறு, சுக்கு, நண்டு, தெள்கு குற்றியலிகரம் :

ரு சொற்கள் புணரும் போது வருமொழிக்கு முதலில் யகரம் வர, நிலை மொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாய்த் திரியும். இந்த இகரமும், 'மியா' என்னும் முன்னிலை அசைச் சொல்லில் உள்ள இகரமும் குற்றியலிகரங்களாகும். இவ்விகரம் தனக்குரிய மாத்திரையிற் குறைந்து ஒலிக்கும்.

(எ.டு) நாடு + யாது

நாடியாது

வரகு + யாது வரகியாது

கேண்மியா சாத்தா.