உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இளங்குமரனார் தமிழ்வளம்

4

ஙகரம் பிறக்குமிடம் :

நாக்கின் அடிப்பாகம் மேல் வாயடியைச் சேர்தலால்

ஙகரம் பிறக்கும்.

ஙகரத்தின் முன் மயங்கும் எழுத்து :

ஙகரத்தின் முன் ககரம் மயங்கும்.

(எ.டு) தங்கம்

சகரம் பிறக்குமிடம் :

நாக்கின் நடுப்பாகம் மேல்வாயின் இடையைச் சேர்தலாற் சகரம் பிறக்கும்.

சந்தி :

வடமொழித் தொகைப் பதங்கள் தமிழில் ஆங்காங்கு வருமிடத்துப் பெரும்பாலும் அவ் வடநூற் புணர்ச்சியே பெறும். வட நூலார் புணர்ச்சியைச் 'சந்தி' என்பர். அது உயிரோடு புணர்கையில் தீர்க்க சந்தி, குணசக்தி, விருத்தி சந்தி என மூவகைப் படும்.

மேலும் தமிழில் புணரியலிற் சொல்லப்படுவன வாகிய தோன்றல் முதலிய புணர்ச்சி வேறுபாடுகள் சந்திகளாகும். ‘சாவ’ என்பதற்குச் சிறப்பு விதி :

சாவ என்னுஞ் செயவென் வாய்பாட்டு வினையெச் சத்தினுடைய இறுதியில் உள்ள வகர உயிர்மெய் வருமொழி யோடு புணர்கையில் கெடுதலும் உண்டு.

(எ.டு) சாவ + குத்தினான்

=

சாக்குத்தினான்

‘சார்' என்னுங் கிளவிக்குச் சிறப்புவிதி :

சார் என்னும் சொல் காழ் என்னுஞ் சொல்லோடு புணருமிடத்து வல்லெழுத்து மிக்கு முடியும்.

(எ.டு) சார் + காழ் = சார்க்காழ்.

சில ஈகாரவீற்றின் முன் வல்லினம் புணர்தல் :

இடக்கர்ப் பெயராகிய பகர ஈகராத்துக்கும், நீங்கு தலென்னும் பொருள் கொண்ட நீ என்ற முதனிலைத் தொழிற் பெயர்க்கும், மேலாகிய பண்பையும் மேலிடத்தையும் உணர்த்தும் ‘மீ' என்ற சொல்லுக்கும் முன்னே அல்வழிப் புணர்ச்சியில்