உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486

இளங்குமரனார் தமிழ்வளம்

4

பேசுவிலங் காங்கவரி பின்புறங்கொள் சாமரையை

ஏசறையார் சொல்வார் இணை."

இதில், புலமையிற் சிறந்த காரிகையாற் சிரமேற் கொள்ளப் பட்ட தெக்கேச மென்னும் தொடர்ப்பொருளும், விலங்கு பின்புறங்கொண்ட என்னும் சொற்பொருளும் சேர்ந்து காரிகை கூந்தற்குச் சாமரை யொப்பாகாமை முடிக்கப்பட்டது.

தொடர்நிலைச் செய்யுட் பொருட் பேரணி

ஒரு பொருளைச் சொல்லத் தண்டபூபிகா நியாயம் என்பர். மற்றொரு பொருள் தோன்றுதலாம்.

தண்டாபூபிகா நியாயம்

தண்டத்தைப் பெற்றுக் கொள்வதனால் அதனிற்சேர்த்து வைத்த அப்பம் முதலிய உணவு கொள்ளப்படுதலுந் தானே விளங்கல். இதனை வடநூலார் 'காவியார்த்தா பத்தியலங்கார’ மென்பர்.

எடு :-

“மங்கைமுகம் திங்களையே வாட்டிற் றறைகுவதென் பங்கயமென் போதுபடும் பாடு."

தொடர் முழுதுவமையணி

இரண்டு தொடர்களில் இயல்பான அறத்தைத் தனித் தனியாக வெவ்வேறு சொற்களால் சொல்லுதலாம். இதனை வடநூலார் ‘பிரதி வஸ்தூபமாலங்கார’ மென்பர். இவ்வணி நிகர் தொடர்முழுதுவமை, முரண் தொடர் முழுதுவமை என

இருவகைப்படும்.

எடு :-

(1) “தாபத்தி னால்விளங்கும் வெய்யோன் தராபதிநீள் சாபத்தி னால்விளங்குந் தான்.”

(2) “கற்றோ னருமைகற்றோ னேயறியும் வந்திமகப் பெற்றோ ளருமையறி யாள்.'

இதில், கற்றோனே அறியு மென்றதற்கு, மலடி அறியாள் என்பதாற் றோன்றும்,

உவமானம்.

பெற்றவளே அறிவாளென்பது