உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

487

தொல்லுருப் பெறலணி

இவ்வணி இருவகைப்படும். இதனை வடநூலார் ‘பூர்வ ரூபாலங்கார' மென்பர்.

(1) ஒன்று மற்றொன்றன் குணத்தை யடைந்திருந்தும் மீண்டுந் தன் குணத்தையே அடைதலாம்.

எடு :-

“நித்தன் களக்கறையா னீலுருக்கொள் சேடனுன்சீர்

உற்றடைந்தான் தன்முன் னுரு.

99

(2) ஒரு பொருள் வேறுபாட்டை யடைந்த போதிலும் பழைய திசையைச் சொல்லுதலாம்.

எடு :-

“வளியால் விளக்கவிந்து மாறுளத்தி னாணம்

ஒளிமே கலைசெயலால் உண்டு.

தொழிற் குறைவிசேடம்

இது விசேடவணி வகைகளுள் ஒன்று. தொழிலில் குறைவு தோன்றக் கூறிக் காரியத்தில் உயர்வு தோன்றக் கூறுவது தொழிற் குறை விசேடம் என்னும் அணியாகும்.

எடு :-

66

ஏங்கா முகில்பொழியா நாளும் புனறேங்கும் பூங்கா விரிநாடன் போர்மதமா - நீங்கா

வளைபட்ட தாளணிகண் மாறெதிர்ந்த தெவ்வர் தளைபட்ட தாட்டா மரை.

وو

சோழனுடைய யானைகள், போரணிபூண்ட மாத்திரத்திலே பகைவர் தோல்வியுற்று விலங்கிடப்பட்டனரென்பது இதன் கருத்து. போரணி பூண்டு போய்ப் பகைவருடன் எதிர்த்துப் போர் செய்தலாகிய தொழில்களில் போரணி மாத்திரமே கூறிக் குறைபாடு விளக்கிக் காரியத்தில் உயர்வு தோன்றச் சொன்னமையால் இது தொழிற்குறை விசேடமாயிற்று. தொழிற்றன்மையணி

தன்மையணி வகைகளுள் ஒன்று. தொழிலிலுள்ள பலவித மான இயல்புகளை உள்ளவாறே அழகுறுத்திப் பாடுவது.