உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488

எடு :-

இளங்குமரனார் தமிழ்வளம்

4

“சூழ்ந்து முரன்றணவி வாசந் துதைந்தாடித்

தாழ்ந்து மதுநுகர்ந்து தாதருந்தும் - வீழ்ந்தபெரும் பாசத்தார் நீங்காப் பரஞ்சுடரின் பைங்கொன்றை வாசத்தார் நீங்காத வண்டு.'

இது வண்டின் தொழிலைக் கூறியதனால் தொழிற்றன்மை. சூழ்ந்து முரலுதல் முதலியன தாதுண்ணுதற்கண் இயல்பாக நிகழுந்தன்மைகள்.

தொகைவிரியுருவக அணி

இ து து உருவக அணி வகைகளுள் ஒன்று. ஆகிய, ஆக என்னும் உருவக உருபுகள் மறைந்தும், விரிந்தும் நிற்கப் பாடுவதாம். எடு :

6

“வையந் தகழியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய சுடராழி யானடிக்கே சூட்டுவன் சொன்மாலை இடராழி நீங்குவே யென்று."

நற்பொருட்காட்சியணி

ஒருவன் தன்னிடத்திலிருக்குஞ் செய்கையால் மற்றவருக்குத் தீங்கான பயனையாவது நன்மையான பயனையாவது அறிவிப்பது நற்பொருட் காட்சியணியாகும்.

எடு :-

"இல்லறத்தோர் சாதுகட் கின்னதிதி பூசையினை

எல்லைசெய வேண்டுமென வேயுணர்த்தும் - நல்லுதய

மாமலைதன் பாலே வருமிரவி யைக்கொளுஞ்சூ டாமணித்தா னத்தினிலே டா.

நான்கடி முற்று மடக்கு

وو

நான்கு அடிகளைக் கொண்ட பாவில் ஒரே விதமான சொற்கள். எல்லா வடிகளிலும் மடங்கி வந்து வேறு வேறு பொருள் வரத் தொடுப்பது நான்கடி முற்று மடக்கு என்னும் அணியாம்.