உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

489

எடு :-

66

வானக கந்தரு மிசைய வாயின

வான கந்தரு மிசைய வாயின

வான கந்தரு மிசைய வாயின

வான கந்தரு மிசைய வாயின.'

(இ.ள்) மேகம் கடலினிடத்துற் கொடுக்கும் ஓசையோடு கூடியிருந்தன. வானத்தை வவ்விக் கொள்ளும் எழுச்சியவாயின; விண்ணகத்தை ஒக்கும் புகழை உடையன; மரங்களை உச்சியிலே உடையன பெரிய மலைகள்.

நிகழ்வின் நவிற்சியணி

முன் நடந்ததையேனும் பின்நடப்பதை யேனும் அப்போது நடக்கிறதாகச் சொல்லுவது நிகழ்வின் நவிற்சியணியாம். இதனை வடநூலார் 'பாவிகாலங்கார' மென்பர்.

எடு :-

"பிரிவுணர்ந்த அந்நாளப் பேதைவிழிக் கஞ்சம் சொரிதரளம் யான்றூர நாட்டில் - மருவலுறும்

இப்போதுங் காண்கின்றேன் என்செய்கோ இங்கிதற்குத் துப்போது தோழநீ சூழ்ந்து."

நிதரிசன வணி

ஒரு வகையால் நிகழ்கின்ற ஒன்றற்குப் பொருந்தியதொரு பயனைப் பிறிதொன்றற்கு நன்மை புலப்பட நிகழ்வதாதல், தீமை புலப்பட நிகழ்வதாதல், செய்வதெனச் சொல்லுவது நிதரிசன மென்னும் அணியாம்.

எடு :-

“பிறர்செல்வங் கண்டாற் பெரியோர் மகிழ்வும்

சிறியோர் பொறாத திறமும் - அறிவுறீஇச்

செங்கமல மெய்ம்மலர்ந்த தேங்குமுத மெய்யயர்ந்த

பொங்கொளியான் வீறெய்தும் போது.”

பொங்கொளியான் - சூரியன். வீறு - ஒளி; பெருமை.