உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490

நிந்தை யுவமை

இளங்குமரனார் தமிழ்வளம்

4

து உவமை வகைகளுள் ஒன்று உவமையைப் பழித்து உவமிப்பது நிந்தையுவமையாம்.

எடு

"மறுப்பயின்ற வாண்மதியு மம்மதிக்குத் தோற்கும் நிறத்தலரு நேரொக்கு மேனும் - சிறப்புடைத்துத் தில்லைப் பெருமா னருள்போற் றிருமேனி முல்லைப்பூங் கோதை முகம்.

நியமவுவமை

இது உவமை வகைகளுள் ஒன்று. இன்னதற்கு இன்னதே யுவமையாமெனத்

தேற்றேகாரம்

சொல்லுவது நியம வுவமையாகும்.

எடு :-

புணர்த்துத்

“தாதொன்று தாமரையே நின்முக மொப்பதுமற்

றியாதொன்று மொவ்வா திளங்கொடியே! - மீதுயர்ந்த சேலே பணியப் புலியுயர்த்த செம்பியர்கோன் வேலே விழிக்கு நிகர்.”

நியமவிலக்குச்சிலேடை

துணிந்து

சிலேடித்த பொருளை நியமஞ் செய்து அந்நியமத்தை விலக்குதல். நியமம் - உறுதி.

எடு :-

“சிறைபடுவ புட்குலமே தீம்புனலு மன்ன இறைவநீ காத்தளிக்கு மெல்லை - முறையில் கொடியன குன்றத்தின் மாளிகையே யன்றிக் கடியவிழ்பூங் காவு முள.'

இதனால் சிறைபடுதலுங் கொடுமையும் இவன் காக்கின்ற நிலத்தின்கண் இல்லையெனக் கிடந்தவாறு கண்டு கொள்க. நியமச்சிலேடை

பல பொருள்களுக்குப் பொருந்துமாறு சிலேடித்ததைத் தேற்றேகாரம் புணர்த்தி ஒன்றற்கு நியமமாக்குவது நியமச் சிலேடையாகும்.