உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடு :-

அணி

491

"வெண்ணீர்மை தாங்குவன முத்தே வெறியவாய்க் கண்ணீர்மை சோர்வ கடிபொழிலே - பண்ணீர்மை மென்கோல யாழே யிரங்குவன வேல்வேந்தே நின்கோ லுலாவு நிலத்து.”

நிரனிறையணி : (அ)

சொல்லையும் பொருளையும் நிரலே நிறுத்தி நேரே பொருள் கொள்வது, நிரனிறையணியாகும்.

எடு :-

“காரிகை மென்மொழிய னோக்காற் கதிர்முலையால்

வார்பருவத் தாலிடையால் வாய்த்தளிரால் - நேர்தொலைந்த கொல்லி வடிநெடுவேற் கோங்கரும்பு விற்கரும்பு

வல்லி கவிர்மென் மலர்.”

இதில், சொல்லப்பட்ட உவமேயப் பொருள்களுள்ளும், உவமானப் பொருள்களுள்ளும் சொல்லாற் பண்ணும், பார்வை யால் வேலும், தனத்தாற் கோங்கரும்பும், புருவத்தால் வில்லும், இடையால் கொடியும், வாயால் முருக்க மலரும் என முறையே நேர்நேராக இயையப்பொருள் பட்டு நிற்றல் காண்க.

நிரனிறையணி : (ஆ)

வரிசையாகச் சொல்லப்பட்ட பொருள்களுக்குத் தொடர்பு உள்ளவைகளை அம்முறையே சொல்லுவது நிரனிறையணியாகும். எடு :-

"தரியலர்க்குந் தன்னிற் பிரியலர்க்கும் எங்கோன்

தெரிதுன்பும் இன்புஞ் செயும்.

நிரோட்டம்

இதழ்குவிக்கும்

உயிரெழுத்தும் மெய்யெழுத்துங்

கலவாமற் பாடுவது நிரோட்டம் என்னும் அணியாம்.

எடு :-

“எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கரிய செயல்.