உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492

நினைப்பணி

இளங்குமரனார் தமிழ்வளம்

4

ஒரு பொருளைப் பார்த்து அதோடு ஒப்புமையுை மற்றொரு பொருளை நினைத்தலில் அமைவது நினைப்பணி யாகும்.

எடு :-

66

காதலுறு கஞ்சமலர் கண்ட வெனதுமனம் கோதைமுகம் தன்னைநினைக் கும்.

நுட்பவணி

وو

பிறர் கருத்தை யறிந்து கொண்டு வெளிப்படையாகக் கூறா மல் குறிப்பினானாதல், தொழிலினானாதல் அரிதாக நோக்கி யுணருந் தன்மையுடையதாய்க் கூறுவது நுட்பம் என்னும் அணி யாம். இதனை வடநூலார் 'சூட்சுமாலங்கார' மென்பர்.

எடு :-

“காதலன் மெல்லுயிர்க்குக் காவல் புரிந்ததால் பேதைய ராயம் பிரியாத - மாதர்

படரிருள்கால் சீக்கும் பகலவனை நோக்கிக் குடதிசையை நோக்குங் குறிப்பு.”

இதில், மாதர் கூட்டத்திலிருக்கின்ற தலைவி தலைவன் கருத்தை அறிந்து தன் செய்கையால் இரவிடை வருக வென்று சொல்லியது காண்க.

நுகர்ச்சியின்மையணி

அதன்

ஒரு பொருளின் நுகர்வுக்கு வாராமையை இன்மைக்குச் சான்றாகக் கூறுவது நுகர்ச்சியின்மையணியாகும். எடு :-

“மதியூ கிகளா யிருப்பருமன் மருங்கைப் பாரா திலையென்றே

யதிக பலமாய்த் தீர்மானித்தாரேன் முலையி னிருவரைகள் பதியாதார மின்றியிருப் பமையாலிதும கரத்துவசன் விதியிந் திரசா லத்தொழிலா மிகச் சயிக்கின் றாமம்மா."