உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

493

நெடுமொழியணி

போரை விரும்பினவொருவன் மண்ணினும் விண்ணினும் தனக்கு ஒருவர் நிகரில்லையெனத் தன்னைத்தான் உயர்த்திக் கூறுதல் நெடுமொழியென்னும் அணியாம்.

எடு :-

“அரசர் மறவ ரகத்துதித்த பொன்னை

முரசதிரக் கொண்டிட மான்மோகூர் - வரையயலே யானைமேல் வந்தா ரரம்பையரை வேட்டவரும் வானையே சார்ந்தார் மடிந்து.

பதப் பொருட் காட்சியணி

காட்சியணி வகைகளுள் ஒன்று. உவமான உவமேயங் களுள் ஒன்றில் ஒன்றனது இயல்பைக் கூறுதலாம்.

எடு :-

66

'குவளை மலரழகைக் கொண்டனசீ ரார்ந்து

கவினுமிளந் தோகாய்நின் கண்.

""

“மருத்தகுகோ தாய்நின் வதனத் தொளியைத் தரித்துளதா லொண்சீர்ச் சசி

இவற்றுள், முறையே உவமேயத்தில் உவமான இயல்பும், உவமானத்தில் உவமேய இயல்பும் கூறப்பட்டன.

பரிசங்கையணி :

உயர்திணை அஃறிணை யென்னும் இரண்டு திணையின் கண்ணொரு திணைக்கண் ணொருகூட்டத் தொரு பொருளினைப் பிரித்து உயர்த்திக் கூறுவது பரிசங்கையென்னும் அணியாம். எடு :-

“பதிகளி னதிபதி யரங்கநன் பதியே

நதிகளி னதிபதி பகீரத நதியே

நிதிகளி னதிபதி சங்க நிதியே யெதிகளி னதிபதி பூதூ ரெதியே.