உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

(எ.டு) அவ்யாழ், இவ்யாழ், உவ்யாழ்

அவ்வாடை, இவ்வாடை, இவ்வாடை, உவ்வாடை

சுட்டுப் பெயர்க்குச் சிறப்புவிதி :

37

அஃது, இஃது, உஃது என்னும் மூன்று சுட்டுப் பெயர்களில் மொழிமுதற் சுட்டெழுத்தின் முன் நின்ற ஆய்தம், அச்சுட்டுப் பெயர்களோடு உருபுகள் புணருமிடத்து அன்சாரியை வந்தால் கடும்.

(எ.டு) அஃது + ஐ

=

அதனை

இஃது + ஐ இதனை

உஃது + ஐ

||

=

உதனை

சூத்திரத்தின் இலக்கணம் :

அளவில் பெரிய மலை முதலியவற்றின் நிழலைத் தன்னுள்ளே செவ்வையாக அடக்கி இனிதாகக் காட்டும் சிறிய கண்ணாடியைப் போலச் சில வகை எழுத்துகளாலாகிய தொடர்களிலே பலவகைப் பட்ட பொருள்களைச் செவ்வையாக அடக்கி இனிதா அ காட்டிக்குற்றமில்லாமையாற் சொல்வலி பொருள்வலிகளும் ஆழமுடைமையாற் பொருண் நுணுக்கங்களும் சிறந்து வருவன சூத்திரங்களாகும்.

சூழ்த்திரம், சூழ்ச்சியம் என்பவற்றின் ழகர ஒற்றுக்கெட்டு வந்தது சூத்திரம்.

66

‘முன்பயில் சூத்திரம் இதுவென” என்பது கம்பர்வாக்கு.

செயின் என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சங்கள் :

இவை, இன், ஆல், கால், கடை, வழி, இடத்து, உம் என்னும் விகுதிகளை இறுதியிற் பெற்றுக் காரணப் பொருளில் வந்து, தன் கருத்தாவின் வினையையும், பிற கருத்தாவின் வினையையும் கொண்டு முடியும்.

(எ.டு) வரின், வந்தால்

போல

செய்கின்ற வென்னும் வாய்பாட்டு நிகழ்காலப் பெயரெச்சங்கள் : இவை நிகழ்கால இடைநிலையோடு அகர வீறு பெற்று

வரும்.