உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ்வளம்

4

(எ-டு) உண்ணா நின்ற குதிரை

உண்கின்ற குதிரை

உண்கிற குதிரை

செய்த வென்னும் வாய்பாட் டிறந்தகாலப் பெயரெச்சங்கள் :

இவை, இறந்த கால இடை நிலையோடும் வேறுபட்டு இறந்த காலங்காட்டும் முதனிலையோடும் அகர ஈறு பெற்று வரும்.

(எ.டு) வந்த எருமை

போய குதிரை

உண்ட

ண்ட எருமை

புக்க குதிரை

விட்டகுதிரை

உற்றகுதிரை

தின்ற எருமை

வருந்தின எருமை

செய்து என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள் :

இவை, உ, இ, இய என்னும் ஈறுகளை இறுதியில் பெற்றுத் தன் கருத்தாவின் வினையையே கொண்டு முடியும்.

(எ-டு) வந்து, எண்ணி, காணிய

செய்யுள் வேற்றுமை (விகாரம்) :

மெல்லொற்றை வல்லொற்றாக்கலும் வல்லொற்றை மெல்லொற்றாக்கலும் குற்றெழுத்தை நெட்டெழுத்தாக்கலும், நெட்டெழுத்தைக் குற்றெழுத்தாக்கலும், இல்லாத எழுத்தை வருவித்தலும், உள்ள எழுத்தை நீக்கலும், ஒரு சொல்லினுடைய முதல், இடை, கடை என்னும் மூன்றில் ஓரிடத்துக் குறைந்து வருதலும் ஆகிய இவை செய்யுள் வேறுபாடுகளாகும்.

(எ.டு) "முத்தை வரூஉங்காலம்” முந்தை என்பது வலிந்து நின்றது.

66

'தண்டையினக்கிளி கடிவோள்

>>

பண்டையல்லள் மானோக்கினளே இங்குத் தட்டை என்பது மெலிந்து நின்றது.

“கற்பக நீழல்”

66

நிழல் என்பது நீண்டு நின்றது.

நன்றென்றேன் தியேன்” தீயேன் என்பது குறுகி நின்றது.