உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

39

“நெல்விளையும்மே” விளையுமே யென்பது மகரமெய் விரிந்து நின்றது.

“மரையிதழ்” தாமரை என்பது முதல் குறைந்தது

“ஓதி முது போத்து” ஓந்தி என்பது இடை குறைந்தது. “நீலுண் துகிலிகை” நீலம் என்பது கடை குறைந்தது.

செய்யுமென்னும் வாய்பாட் டெதிர்காலப் பெயரெச்சங்கள் : இவை, இடை நிலையின்றித் தாமே எதிர்காலங்காட்டும் உம் விகுதிபெற்று வரும்.

(எ.டு) உண்ணுங் குழந்தை

நடக்கும் மாடு

செய்யுளிசை யளபெடை :

செய்யுளில் ஓசை

குறையுமிடத்து அவ்வோசையை

நிறைக்க வருவது செய்யுளிசை யளபெடையாம்.

ஓ ஒதல் வேண்டும் ஒளிமாழ்கும்

(எ.டு) ஓ

ஆ அதும் என்னு மவர்.

செய்வினை

ஓதல், ஆதும் என நின்று அளபெடை வாராக்கால் மாமுன் நேர் ஆகி வெண்டளை பிழைபட்டுப் போகும்.

சொல்லிசையளபெடை :

செய்யுளில் ஓசை குறையாவிடத்தும் பெயர்ச்சொல் வினையெச்சத் தன்மையடைதற் பொருட்டு அளபெடுப்பது சொல்லிசையளபெடையாகும். (அளபெடுப்பதால் பொருள்

மாறுபடும்)

(எ.டு) உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்!

வரனசைஇ யின்னு முளேன்

""

இதில் விருப்பம் எனப்பொருள்படும் நசை என்னும் பெயர்ச்சொல், விரும்பி என வினையெச்சப் பொருள் படும் பொருட்டு ‘நசைஇ' என அளபெடுத்தது.

ஞ முன் மயங்கும் எழுத்துகள் :

ஞகரத்தின் முன் அவற்றுக்கினமாகிய சகரமும் யகரமும்

மயங்கும்.