உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ்வளம்

4

(எ.டு) கஞ்சன், உரிஞ்யாது

உரிஞ்யாது என்பதை ஒருசொல் நீர்மைத்தாய்க் கொண்டுரைத்தது. இவ்வாறு வருவன பிறவும் உண்டு.

ஞகரம் பிறக்குமிடம் :

நாக்கின் நடுப்பாகம் மேல் வாயின் இடையைச் சேர்தலால் ஞகரம் பிறக்கும்.

ஞகர மெய்யை முதலாகப் பெற்று வரும் எழுத்துகள் :

அ, ஆ, எ, ஒ ஆகிய நான்கு உயிர் எழுத்தோடு சேர்ந்து ஞகரமெய் சொல்லுக்கு முதலாக வரும்.

(எ-டு) ஞமலி, ஞான்றது

ஞெண்டு, ஞொள்கிற்று

ஞகார வீறு மென் கணத்தோடும் வகரத்தோடும் புணர்தல் :

ஞகாரவீறு வன்கணத்தோடு மட்டுமன்றி, ஞ ந ம ஞ நம முதன்மொழி வருமொழியாய் வந்தாலும் நிலைமொழிக்கண் உகரம் பொருந்தும்.

(எ.டு)

உரிஞ் + ஞான்றது உரிஞு ஞான்றது

உரிஞ் + நீண்டது

உரிஞூ நீண்டது

உரிஞூ மாண்டது

ரிஞ் + மாண்டது

உரிஞ் + வலிது உரிஞூ வலிது.

ஞகார வீறு இருவழியிடத்தும் வன் கணத்தோடு புணர்தல் :

ஞகர மெய்யை இறுதியாகவுடைய தொழிற்பெயர் இரண்டிடத்தும்

முன்னர், வேற்றுமை அல்வழி ஆகிய

வல்லெழுத்து வருமொழியாய் வருமாயின் மிக்குமுடியும். ஆண்டு நிலை மொழி உகரம் பெறும்.

(எ.டு) உரிஞ் + கடிது - உரிஞுக் கடிது.

டகரம் பிறக்குமிடம் :

நாக்கின் நுனிப்பாகம் மேல்வாயைச் சார்தலால் டகரம்

பிறக்கும்.