உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

41

‘ட’ முன் மயங்கும் எழுத்துகள் :

டகரத்தின் முன் க ச ப என்னும் மூன்று மெய்களும் இணங்கி மயங்கும்.

(எ.டு) வெட்கம், கட்சி, திட்பம்

ண முன் மயங்கும் எழுத்துகள் :

ணகரத்தின் முன் அதற்கு இனமாகிய டகரமும் க, ச, ஞ, ப, ம, ய, வ ஆகிய ஏழு மெய்களும் மயங்கும்.

(எ.டு) விண்டு, உண்கு, வெண்சோறு, வெண் ஞமலி, பண்பு, வெண்மை, மண்யாது, மண் வலிது.

ணகரம் பிறக்குமிடம் :

நாக்கின் நுனிப்பாகம் மேல்வாயைச் சார்தலால் ணகரம்

பிறக்கும்.

ணகர வீற்றின் கேடு :

தனிக் குற்றெழுத்தைச் சாராத ணகரம் வருநகரந்திரிந்த விடத்து, அல்வழி வேற்றுமை ஆகிய இருவழியிலும் கெடும்.

(எ-டு) அல்வழி

தூண் + நன்று

அரண் + நன்று

தூணன்று அரணன்று

வேற்றுமை

தூண் + நன்மை

தூணன்மை

அரணன்மை

அரண் + நன்மை

ணகர வீற்றின் இயல்பும் திரிபும் :

வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் ணகரம் டகரமாகத் திரியும். மெல்லினமும் இடையினமும் வந்தால் இயல்பாகும். அல்வழிப் புணர்ச்சியில் மூன்றின் மெய்களும் வந்தாலும் இயல்பேயாம்.

(எ-டு) கண் + களிறு கட்களிறு

வல்லினம் வர ட வாயிற்று-

வேற்றுமையில் ண,